

சிலப்பதர்: அசாம் மாநிலத்தில் டகுகானா மற்றும் சிலப்பதரில் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி, அசாமுடன் நேற்று மோதியது. இந்த ஆட்டம் சிலப்பதர் கால்பந்து மைதானத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் 3-வது நிமிடத்தில் எஸ்.தேவதத் கோல் அடித்து அசத்தினார்.