தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி வெற்றி

தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி வெற்றி
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐஓபி - இந்திய உணவுக்கழகம் அணிகள் மோதின.

இந்த ஆட்டம் 1-1 என என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. ஐஓபி அணி தரப்பில் 33-வது நிமிடத்தில் தில்ராஜ் சிங்கும், இந்திய உணவுக்கழகம் தரப்பில் 32-வது நிமிடத்தில் ஆனந்தும் தலா ஒரு கோல் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஐசிஎஃப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஏஜிஓ அணியை வீழ்த்தியது. ஐசிஎஃப் அணி தரப்பில் அலோக் பர்லா, ராகுல் யாதவ், ராகேஷ், ஷியாம் குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

தமிழ் ஹாக்கி லீக்: ஐசிஎஃப் அணி வெற்றி
காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திற‌ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in