ஸ்குவாஷில் சுராஜ் குமார் சாம்பியன்

ஸ்குவாஷில் சுராஜ் குமார் சாம்பியன்
Updated on
1 min read

சென்னை: ஹெச்சிஎல் ஸ்குவாஷ் பிஎஸ்ஏ சாலஞ்சர் டூர் போட்டி சென்னையில் உள்ள இந்தியா ஸ்குவாஷ் அகாடமியில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று இறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுராஜ் குமார் சந்த், தென் கொரியாவின் ஜியோங்மின் ரியூவை எதிர்த்து விளையாடினார்.

இதில் சுராஜ் குமார் சந்த் 11-5, 11-9, 11-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள எகிப்தின் ரவுகையா 12-10, 11-7, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஹர்லுன் டானை வீழ்த்தி பட்டம் வென்றார்.

ஸ்குவாஷில் சுராஜ் குமார் சாம்பியன்
“எதிரிகளால் எங்கள் வெற்றியை தள்ளிப்போட முடியும்; தடுக்க முடியாது” - காரைக்குடியில் சீமான் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in