

இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா
கொழும்பு: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் செப்டம்பர் 15-ம் தேதியும், ஒருநாள் தொடர் செப்டம்பர் 22-ம் தேதியும் தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.
டி20 மற்றும் ஒருநாள் தொடர் என 2 தொடர்களிலுமே குசல் மெண்டிஸ் கேப்டனாக வழிநடத்துவார் என்றும், சரித் அசலங்கா துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் குசல் மெண்டிஸ் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக சரித் அசலங்கா கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி விவரம் (டி20 தொடர்): சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசங்கா, கமில் மிஷ்ரா, லஹிரு உதாரா, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியாநகே, தசன் ஷனகா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, தரிந்து ரத்நாயகே, துஷ்மந்தா சமீரா, இஷான் மலிங்கா, நுவான் துஷாரா, பவன் ரத்நாயகே, தில்ஷன் மதுஷனகா.