ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சுவிட்சர்லாந்தை 4-0 என வீழ்த்தியது இந்திய அணி

ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சுவிட்சர்லாந்தை 4-0 என வீழ்த்தியது இந்திய அணி
Updated on
1 min read

சென்னை: எஸ்​டிஏடி ஸ்கு​வாஷ் உலகக் கோப்பை தொடர் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. 12 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்​தத் தொடரில் ‘பி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் நேற்று சுவிட்​சர்​லாந்​துடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 4-0 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றது.

ஆடவர் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் வேல​வன் செந்​தில் குமார் 7-6, 7-6, 7-5 என்ற செட் கணக்​கில் ராபின் கடோலாவை வீழ்த்தினார். மற்​றொரு ஆட்​டத்​தில் அபய் சிங் 7-0, 7-5, 7-3 என்ற செட் கணக்​கில் லூவாய் ஹபீஸை தோற்​கடித்​தார். மகளிர் பிரிவில் இந்​தி​யா​வின் அனஹத் சிங், செலின் வால்​சருடன் மோதினார். இதில் அனஹத் சிங் 7-1, 7-4, 7-2 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றார்.

மற்​றொரு ஆட்​டத்​தில் ஜோஷ்னா சின்​னப்பா 7-1, 5-7, 7-2, 7-0 என்ற செட் கணக்​கில் ஸ்டெல்லா காஃப்​மேனை வீழ்த்​தி​னார். ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஹாங் காங் 4-0 என்ற கணக்​கில் கொரி​யா​வை​யும், ‘டி’ பிரி​வில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஜப்​பான் 4-0 என்ற கணக்​கில் ஈரானை​யும் தோற்​கடித்​தன.

இன்று (10-ம் தேதி) நடை​பெறும் ஆட்​டங்​களில் ‘சி’ பிரி​வில் உள்ள ஆஸ்​திரேலியா - போலந்து அணி​களும், ‘பி’ பிரி​வில் உள்ள பிரேசில் - சுவிட்​சர்​லாந்து அணி​களும், ‘ஏ’ பிரி​வில் உள்ள தென் ஆப்​பிரிக்கா - கொரியா அணி​களும் மோதுகின்​றன. இந்​திய அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் பிரேசிலுடன் நாளை (11ம் தேதி) மோதுகிறது. இந்த ஆட்​டம் பிற்​பகல் 2.30 மணிக்கு எக்​ஸ்​பிரஸ் அவென்​யூ மாலில்​ நடைபெறுகிறது.

ஸ்குவாஷ் உலகக் கோப்பை: சுவிட்சர்லாந்தை 4-0 என வீழ்த்தியது இந்திய அணி
பொருளாதாரத்தில் முன்னேற்றம்: பாகிஸ்தானுக்கு ரூ.10,780 கோடி கடன் வழங்க ஐஎம்எப் ஒப்புதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in