இந்தியா உடனான ஒருநாள், டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

பவுமா

பவுமா

Updated on
1 min read

சென்னை: இந்திய அணி உடனான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இதில் ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை தெம்பா பவுமா வழிநடத்துகிறார்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நவ.22-ம் தேதி கவுஹாத்தியில் தொடங்குகிறது.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக இந்த இரண்டு தொடரிலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா விளையாடவில்லை. வரும் நவ.30-ம் தேதி ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. டிச.9-ம் தேதி டி20 தொடர் தொடங்குகிறது.

ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி: தெம்பா பவுமா (கேப்டன்), பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரெட்ஸ்கீ, டெவால்ட் பிரெவிஸ், நேந்ரே பர்கர், டி காக், கேஷவ் மகாராஜ், டி சோர்ஸி, ரூபின் ஹெர்மான், மார்கோ யான்சன், மார்க்ரம், இங்கிடி, ரியான் ரிக்கல்டன், சுப்ராயன்.

டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி: மார்க்ரம் (கேப்டன்), பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், ஸ்டப்ஸ், டி காக், கேஷவ் மகாராஜ், டி சோர்ஸி, டோனோவன் பெரேரியா, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, மாபகா, டேவிட் மில்லர், இங்கிடி, நோர்க்யா.

<div class="paragraphs"><p>பவுமா</p></div>
வேகப்பந்து வீச்சின் சொர்க்கம்: பெர்த் டெஸ்ட் முதல் நாளில் 19 விக்கெட்டுகள் சரிவு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in