

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 400 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 124.1 ஓவர்களில் 557 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
ரியான் ரிக்கெல்டன் 102, காகிசோ ரபாடா 72 ரன்கள் விளாசினர். வங்கதேசம் அணி சார்பில் ஹசன் மஹ்மூத் 4 விக்கெட்கள் கைப்பற்றினார். 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி 34 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது.