உலக சாம்பியனை வீழ்த்தினார் சோனோவால்

உலக சாம்பியனை வீழ்த்தினார் சோனோவால்
Updated on
1 min read

கிளாஸ்கோ: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்​டில் தொடக்க நாளான நேற்று லான் பவுல் விளை​யாட்​டில் இந்​திய அணி சிறப்​பாக செயல்​பட்​டது.

மகளிருக்​கான அணி​கள் பிரி​வில் இந்​தி​யா​வின் ரூபா ராணிதிர்கே, பிங்கி ஜோடி மால்​டா​வின் ரெபெக்கா லூயிஸ் ரிக்சன், கோனி லீ ரிக்​சன் ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. முதல் செட்டை இந்​தியா 7–1 எனவும், 2-வது செட்டை மால்டா 4–3 எனவும் கைப்​பற்​றின. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க நடத்​தப்​பட்ட டை பிரேக்​கரில் இந்​திய ஜோடி 1-0 என வெற்றி பெற்றது.

ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் இந்​தி​யா​வின் புதுல் சோனோவால், உலக சாம்​பிய​னான கனடா​வின் ரியான் பெஸ்​டரை எதிர்த்து விளை​யாடி​னார். முதல் செட்டை புதுல் சோனோ​வால் 5–4 என கைப்​பற்​றி​னார்.

ஆனால் 2-வது செட்டை ரியான் பெஸ்​டர் 7–3 என தன்​வசப்​படுத்​தி​னார். இதையடுத்து நடை​பெற்ற டைபிரேக்​கரில் புதுல் சோனோ​வால் 1–0 என வெற்றி பெற்​றார். இன்று நடைபெறும் ஆட்​டத்​தில் ஃபாக்​லாந்து தீவு​களின் வீரர் செசில் அலெக்​ஸாண்​டருடன் மோதுகிறார்​ புதுல்​ சோனோவால்​.

உலக சாம்பியனை வீழ்த்தினார் சோனோவால்
வினாத்தாள் கசிவு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விவாதம்: செல்ஃபி வீடியோ மூலம் பிரதமர் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in