“என் மகனின் கிரிக்கெட் பயணத்துக்காக வீட்டை விற்றேன்” - முகுல் சவுத்ரியின் தந்தை பகிர்வு

முகுல் சவுத்ரி

முகுல் சவுத்ரி

Updated on
1 min read

ஜெய்ப்பூர்: “என் மகனின் கிரிக்கெட் பயணத்துக்காக வீட்டை விற்றேன்” என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் முகுல் சவுத்ரியின் தந்தை தலிப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடனான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் லக்னோ வீரர் முகுல் சவுத்ரியின் பங்கு மிக முக்கியமானது. 27 பந்துகளில் 54 ரன்களை அவர் விளாசி இருந்தார். இதில் மொத்தம் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200. அவரது இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் லக்னோ அணியின் மேட்ச் வின்னர் ஆனார்.

இந்நிலையில், முகுல் சவுத்ரியின் தந்தையான தலிப் சவுத்ரி செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியது: “எனது மகன் கிரிக்கெட் வீரனாக வேண்டும் என விரும்பினேன். அதற்கான என்ன வேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருந்தேன். அதற்காக எனது மகனை கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிக்காக சேர்த்தேன்.

எனக்கு நிலையான வருமானம் என்பது இல்லை. அதனால் எனது வீட்டை விற்று ரூ.21 லட்சம் பெற்றேன். அதற்கடுத்த ஆண்டு ஹோட்டல் ஒன்றை தொடங்கினேன். கடன் பெற்றேன். என்னால் கடன் தவணையை முறையாக செலுத்த கூட முடியவில்லை.

எனது உறவினர்கள் எங்களை விட்டு பிரிந்தனர். என்னை புத்தி அற்றவன் என சொல்லினர். மகனின் வாழ்க்கையையும் பாழ்படுத்துவதாக சொன்னார்கள். அந்த கடுமையான சொற்கள் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கையை தந்தது” என்று தெரிவித்துள்ளார். இப்போது அதற்கான பலனை தனது மகன் மூலம் அவர் பெற்றுள்ளார்.

<div class="paragraphs"><p>முகுல் சவுத்ரி</p></div>
பொது சிவில் சட்டம், மகளிருக்கு ரூ.3,000 - மேற்கு வங்க பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in