

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் - ஷிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, சீன தைபேவின் சாங் கோ-சி, போ லி-வேய் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
48 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சாட்விக்- ஷிராக் ஜோடி 25-23, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 10-21, 14-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் குசுமா, புஸ்பிதாசாரி ஜோடியிடம் தோல்வி அடைந்தது.