சந்​தோஷ் டிராபி: தமிழக கால்​பந்து அணி அபார வெற்றி!

சந்​தோஷ் டிராபி: தமிழக கால்​பந்து அணி அபார வெற்றி!
Updated on
1 min read

குவாஹாட்டி: 79-வது சந்​தோஷ் டிராபிக்​கான தேசிய கால்​பந்​துப் போட்​டி​யில் தமிழக அணி அபார வெற்​றியைப் பதிவு செய்​துள்​ளது.

இந்த கால்​பந்து லீக் போட்டி அசாம் மாநிலம் தாகு​வா​கானா கால்​பந்து மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் தமிழக அணி​யும், நாகாலாந்து கால்​பந்து சங்க அணி​யும் மோதின. இதில் தமிழக அணி 3-0 என்ற கோல் கணக்​கில் அபார வெற்​றியைப் பதிவு செய்​தது.

தமிழக அணி சார்​பில்​ ஏ. ரீகன்​ 43-வது நிமிடத்​தி​லும்​, சூரஜ்கு​மார்​ 65-வ து நிமிடத்​தி​லும்​, எஸ்​.தேவதத்​ 89-வது நிமிடத்​திலும்​ தலா ஒரு கோல்​ அடித்​து அணிக்​கு வெற்​றி தேடித்​ தந்​தனர்​. சிறப்​பாக விளை​யாடி ஒரு கோலடித்​த எஸ்​.தேவதத்​ சிறந்​த வீர​ராக தேர்​வு செய்​யப்​பட்டார்.

சந்​தோஷ் டிராபி: தமிழக கால்​பந்து அணி அபார வெற்றி!
டி20 உலகக் கோப்பை: 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in