‘எங்கள் வீரர்கள் தயார்’ - மே.இ. தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி பகிர்வு | T20 WC 2026

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி

Updated on
1 min read

கொல்கத்தா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 குரூப்-1 ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இன்று பலப்பரீட்சை செய்கின்றன. இதில் வெற்றி பெறுகின்ற அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு முன்பாக மேற்கு இந்தியத் தீவுகளின் பயிற்சியாளர் டேரன் சமி கூறியதாவது: “இந்த தொடரை வெல்ல ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்திய அணியை கடந்து வர வேண்டும். அந்த வகையில் வெற்றிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளோம்.

இந்த ஆட்டம் இன்னும் டேவிட் மற்றும் கோலியாத் மோதலை போலதான் இருக்கும். ஆனால், கடந்த 2016-ல் டேவிட் கோலியாத்தை வீழ்த்தினார். அதைத்தான் நான் எங்கள் அணி வீரர்களுக்கு சொல்வேன். அதற்கு எங்கள் வீரர்கள் தயாராக உள்ளனர்.

இந்தியா வீழ்த்தக்கூடிய அணிதான் என்று தென் ஆப்பிரிக்கா வெளிப்படுத்தி உள்ளது. ஆனால், அவர்களுக்கு எதிராக சிறந்த பவர் ஹிட்டர்கள் தேவை. வருண் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 வீரராக உள்ளார். எதிரணிகளுக்கும் நாங்கள் மதிப்பளிப்போம். ஹெட்மயர் தனது ஆட்டத்தின் மூலம் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்” என்றார்.

இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் என இரண்டு அணிகளும் குரூப் சுற்று ஆட்டத்தில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் இரண்டு அணிகளும் தென் ஆப்பிரிக்கா உடனான ஆட்டத்தில் தோல்வியடைந்தன. இந்த சூழலில் தற்போது இரண்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்கின்றன.

<div class="paragraphs"><p>மேற்கு இந்தியத்&nbsp;தீவுகள் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி</p></div>
சிம்பு - அஸ்வத் மாரிமுத்து இணையும் படத்தின் பணிகள் தீவிரம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in