டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் - சாய் சுதர்ஷன் சாதனை

டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் - சாய் சுதர்ஷன் சாதனை
Updated on
1 min read

கொல்கத்தா: டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான சாய் சுதர்ஷன் கடந்த சில ஆண்டுகளாக குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற 60-வது லீக் போட்டியின்போது கொல்கத்தா அணிக்கெதிராக சாய் சுதர்ஷன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின்போது டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் (78 இன்னிங்ஸ்) 3,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை சாய் சுதர்சன் படைத்தார். இந்த வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 85 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் - சாய் சுதர்ஷன் சாதனை
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in