அகம​தா​பாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு!

அகம​தா​பாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு!
Updated on
1 min read

புதுடெல்லி: அகம​தா​பாத் காமன்​வெல்த் போட்​டியை நடத்த ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செல​வாகும் என்று தெரிய​வந்​துள்​ளது.

2030-ம் ஆண்டு காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டி குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் நடை​பெறவுள்​ளது. இதுதொடர்​பான அதி​காரப்​பூர்வ அறி​விப்பை காமன்​வெல்த் விளை​யாட்டு ஆணையம் கடந்த வாரம் வெளி​யிட்​டது. இந்​நிலை​யில் இந்​தப் போட்டியை அகம​தா​பாத்​தில் நடத்​து​வதற்கு ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செல​வாகும் என்று தெரியவந்துள்ளது.

இதுதொடர்​பாக காமன்​வெல்த் விளை​யாட்​டுப் போட்டி வட்​டாரங்​கள் கூறிய​தாவது: போட்​டியை நடத்​து​வதற்​கான அனைத்து ஏற்​பாடு​களும் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. போட்​டியை நடத்​து​வதற்​கான மைதானங்​களில் உள்ள அடிப்​படைக் கட்​டமைப்பு வசதிகளை மேம்​படுத்​துதல், ரசிகர்​கள் பயன்​படுத்​தும் கேலரி உள்​ளிட்ட பகு​தி​களை சீரமைத்​தல் போன்ற பணி​கள் செய்யப்படும். புதி​தாக விளை​யாட்டு அரங்​கு​களை அமைப்பதற்கான செல​வு​கள் இதில் அடங்​காது.

தற்​போதைய கணக்​குப்​படி ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செல​வாகும் என உத்​தேசித்​துள்​ளோம். 2010ல் டெல்லியில் காமன்​வெல்த் போட்​டிக்​காக ரூ.2,600 கோடி செல​விடப்​பட்​டது. ஆனால் உத்​தேசித்த தொகை ரூ.635 கோடி​யாகவே இருந்​தது. மேலும் போட்​டிக்​காக விளை​யாட்டு மைதானங்​களை அமைத்​தல் உள்​ளிட்ட செல​வு​கள் அனைத்​தை​யும் சேர்த்து ரூ.70 ஆயிரம்​ கோடி வரை செல​விடப்​பட்​டது. இவ்​​வாறு அந்​த வட்டாரங்கள்​ தெரிவித்​தன.

அகம​தா​பாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிக்கு ரூ.5,000 கோடி செலவு!
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் கால்பதித்தது ஜெர்மனி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in