“ஆர்சிபி அணி பவர்பிளேவிலேயே ஆட்டத்தை பறித்துவிட்​டது” - குஜராத் கேப்​டன் ஷுப்​மன் கில் வேதனை

“ஆர்சிபி அணி பவர்பிளேவிலேயே ஆட்டத்தை பறித்துவிட்​டது” - குஜராத் கேப்​டன் ஷுப்​மன் கில் வேதனை
Updated on
1 min read

அகம​தா​பாத்: ஐபிஎல் இறு​திப் போட்​டி​யில் ஆர்சிபி அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்து 2-வது முறையாக பட்​டம் வெல்​லும் வாய்ப்பை ஷுப்​மன் கில் தலைமையி​லான குஜராத் டைட்டன்ஸ் அணி இழந்​தது.

முதலில் பேட் செய்த குஜராத் அணியை ஷார்ட் பால் வியூ​கத்தை பயன்​படுத்தி ஆர்சிபி அணி 155 ரன்​களுக்​குள் கட்​டுப்​படுத்​தி​யது. 156 ரன்​கள் இலக்கை துரத்​திய ஆர்​சிபி அணி பவர்​பிளே​வில் 70 ரன்​களை குவித்து வெற்​றிக்​கான பாதையை எளிதாக்​கியது. கடைசி வரை களத்​தில் நின்று 42 பந்​துகளில், 75 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு விராட் கோலி முக்​கிய பங்​காற்​றி​னார்.

இறு​திப் போட்​டிக்கு பின்​னர் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யின் கேப்டன் ஷுப்​மன் கில் கூறிய​தாவது: நாங்​கள் 180 முதல் 190 ரன்கள் எடுத்​திருந்​தால், அது ஒரு நல்ல போட்​டி​யாக இருந்திருக்கும். ஆடு​களம் ஆங்​காங்கே சற்று மாறு​பட்ட வேகத்தில் இருந்​தது. பந்து சில நேரம் மெது​வாக​வும், சில நேரம் வேக​மாக​வும் வந்​தன. வேகப்​பந்து வீச்​சாளர்​களுக்கு ஆரம்​பத்​தில் பந்து சற்று ஸ்விங் ஆனது. நாங்​கள் ஆரம்​பத்​திலேயே விக்கெட்டுகளை இழந்​து​விட்​ட​தால், எங்​களால் இறு​திவரை உத்வேகத்தை பெற முடி​யாமல் போனது.

பவர்​பிளே ஓவர்​களில் நாங்​கள் ஒன்​றிரண்டு விக்​கெட்​டு​களை எடுத்​திருந்​தால், ஆட்​டத்​துக்​குள் நிலைப் ெபற்றிருக்க முடி​யும் என்று நினைத்​தோம். ஆனால், நாங்​கள் 15 முதல் 20 ரன்​களை கூடுதலாகக் கொடுத்​துவிட்​டோம். வெங்​கடேஷ் ஐயரும், விராட் கோலி​யும் பவர்​பிளே​யிலேயே ஆட்​டத்தை எங்​களிட​மிருந்து பறித்துச் சென்​று​விட்​டார்​கள். நாங்​கள் இந்​தத் தொடரின் மிகச்சிறந்த பந்​து​வீச்சு அணி​களில் ஒன்​றாக இருந்​தோம்.

முதல் இரண்டு போட்​டிகளில் தோல்​வியடைந்த பிறகும், நாங்​கள் மிக​வும் பலமாக மீண்டு வந்​தோம். எங்​களை நாங்​களே தொடர்ந்து சவாலுக்கு உட்​படுத்​திக் கொண்​டு, ஆட்​டத்தை மேம்படுத்​திக் கொண்டே இருந்​தோம். ஒட்​டுமொத்​த​மாக இந்​தத் பயணத்​தில் எனக்கு மிகுந்த மகிழ்ச்​சி​யே. எங்​களால் இறு​திப் புள்ளியைத் தாண்​டிச் சென்று கோப்​பையை வெல்ல முடி​யாமல் போயிருக்​கலாம். ஆனால், ஒரு​வேளை நாங்​கள் கோப்​பையை வென்​றிருந்​தா​லும் கூட, இன்​னும் மேம்​படுத்​திக் கொள்ள வேண்டிய விஷ​யங்​கள் இருக்​கத்​தான் செய்​யும்​. இவ்​வாறு ஷுப்மன்​ கில் கூறினார்.

“ஆர்சிபி அணி பவர்பிளேவிலேயே ஆட்டத்தை பறித்துவிட்​டது” - குஜராத் கேப்​டன் ஷுப்​மன் கில் வேதனை
“எப்போதும் ஒரே பாணியில் விளையாட முடியாது” - வைபவ் சூர்யவன்ஷி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in