சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் - தமிழக அணி அபார வெற்றி

சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் - தமிழக அணி அபார வெற்றி
Updated on: 
1 min read

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்நாடு - உத்த​ராகண்ட் அணி​கள் இடையி​லான ஆட்​டம் சென்னை சேப்பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் உத்​த​ராகண்ட் 56.2 ஓவர்​களில் 134 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதேவேளை​யில் தமிழக அணி 109 ஓவர்​களில் 313 ரன்​கள் குவித்தது. அதி​கபட்​ச​மாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 136, பாபா இந்திரஜித் 77 ரன்​கள் விளாசினர். 179 ரன்​கள் பின்​தங்​கிய நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை விளை​யாடிய உத்தராகண்ட் அணி 45.4 ஓவர்​களில் 113 ரன்​களுக்கு ஆட்டமிழந்தது. அதி​கபட்​ச​மாக தேகா நிஷ்சல் 25, லக்​சயா ராய்​சந்​தானி 19, அவ்​னீஷ் சுதா 18 ரன்​கள் சேர்த்​தனர்.

தமிழக அணி தரப்​பில் கேப்​டன் சாய் கிஷோர் 16 ஓவர்​களை வீசி 5 மெய்​டன்​களு​டன் 34 ரன்​களை வழங்கி 6 விக்​கெட்​களை வீழ்த்தினார். இதில் ஹாட்​ரிக் விக்​கெட்​களும் அடங்​கும். 43-வது ஓவரை வீசிய சாய் கிஷோர் கடைசி 3 பந்​துகளில் தொடர்ச்​சி​யாக லக்சயா ராய்​சந்​தானி, சவுரப் ராவத், ஆதித்யா ராவத் ஆகியோரை ஆட்​ட​மிழக்​கச் செய்​தார்.

சாய் கிஷோருக்கு உறு​துணை​யாக வீசிய அஜித் ராம் 4 விக்கெட்களை கைப்​பற்​றி​னார். இன்​னிங்ஸ் மற்​றும் 66 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்ற தமிழக அணிக்​கு ஒரு போனஸ்​ புள்​ளி​யுடன்​ 7 புள்​ளி​கள்​ வழங்​கப்​பட்​டன.

சாய் கிஷோர் ஹாட்ரிக் விக்கெட் - தமிழக அணி அபார வெற்றி
டைகரின் பாய்ச்சலுக்கு கிளாடிஸே காரணம்! | ‘டைகர்’ ராஜரத்தினம் 10

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in