ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்

5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்
Updated on: 
1 min read

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் தமிழ்​நாடு - ரயில்​வேஸ் அணிகள் இடை​யி​லான ஆட்​டம் சென்னை சேப்​பாக்​கம் எம்.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் ரயில்​வேஸ் 184 ரன்​களும், தமிழக அணி 165 ரன்​களும் எடுத்​தன.

19 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ரயில்​வேஸ் அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 51 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 107 ரன்​கள் எடுத்​தது. அதி​கபட்​ச​மாக சஹாப் யுவ​ராஜ் சிங் 42, ரவி சிங் 19, தவுஃபிக் உத்​தின் மொண்​டல் 11, ஜூபைர் அலி 10 ரன்​கள் சேர்த்​தனர்.

ரத்​யும்ன் பரிக் 2, ஹிமான்ஷு சங்க்​வான் ஒரு ரன்​னுடன் களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளையாடிய ரயில்​வேஸ் அணி 52.3 ஓவர்​களில் 108 ரன்​களுக்கு ஆட்டமிழந்​தது.

தமிழக அணி தரப்​பில் கேப்​டன் சாய் கிஷோர் 4, ஜெகநாதன் ஹெம்​சுதேஷன் 3, அஜித் ராம் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். இதையடுத்து 128 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தமிழக அணி 59.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 130 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

ஆந்த்ரே சித்​தார்த் 128 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். விமல் குமார் 10, ஆதிஷ் 21, நாராயண் ஜெகதீசன் 12, சோனு யாதவ் 2, பாபா இந்​திரஜித் 23 ரன்​களில் நடையை கட்​டினர். ஆட்ட நாயக​னாக சாய் கிஷோர் தேர்​வானார். அவர், இரு இன்​னங்​ஸிலும் கூட்​டாக 7 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தமிழக அணிக்கு 6 புள்​ளி​கள் முழு​மையாக கிடைத்​தன.

‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழக அணிக்கு இது 2-வது வெற்​றி​யாக அமைந்​தது. 3 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள தமிழக அணி முதல் ஆட்​டத்தை ராஜஸ்​தான் அணிக்கு எதிராக டிரா செய்​திருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் உத்​த​ராகண்ட் அணியை இன்​னிங்ஸ் மற்​றும் 66 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: ரயில்வேஸ் அணியை வீழ்த்தியது தமிழகம்
3-வது ஒருநாள் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in