

சென்னை: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 193 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அந்த அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானோவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாத கொல்கத்தா அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (17-ம் தேதி) குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.