ரஹானே ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்த பங்களிப்பு என்ன?

ரஹானே ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்த பங்களிப்பு என்ன?
Updated on
2 min read

மும்பை: சர்​வ​தேச கிரிக்​கெட் போட்​டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்​திய அணி​யின் சீனியர் பேட்​ஸ்​மே​னான அஜிங்க்ய ரஹானே தெரி​வித்​துள்​ளார்.

38 வயதான அஜிங்க்ய ரஹானே இந்​திய அணிக்காக 85 டெஸ்ட் போட்​டி, 90 ஒரு​நாள் போட்​டி, 20 டி 20 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்​ளார். அவர், 2013-ம் ஆண்டு இந்​திய அணி​யில் அறி​முக​மா​னார். கடந்த 2023-ல் நடைபெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​களுக்கு எதிரான வெளி​நாட்டு டெஸ்ட் தொடருக்​குப் பிறகு அவர், இந்​திய அணிக்கு தேர்வு செய்​யப்​பட​வில்​லை.

எனது பேட்​டிங்​கில் நான் எப்​போதும் சரி​யான கணிப்​பை​யும் நேரத்​தை​யுமே நம்​பி​யிருக்​கிறேன். அதற்​கான முக்​கி​யத்​து​வத்​தை​யும் நான் நன்கு அறிவேன். சர்​வ​தேச கிரிக்​கெட் மற்​றும் அனைத்து வகை​யான போட்​டிகளி​லிருந்​தும் ஓய்வு பெறுகிறேன். அடுத்த கட்​டத்​துக்கு நகர்​வதற்கு இதுவே சரியான தருணம் என நான் உணர்​கிறேன்” எனத் தெரி​வித்​துள்​ளார்

.வலது கை பேட்​ஸ்​மே​னான ரஹானே டெஸ்ட் கிரிக்​கெட்​டில் 38.46 சராசரி​யுடன் 5,077 ரன்​கள் குவித்​துள்​ளார். இதில் 12 சதங்​கள், 26 அரை சதங்​கள் அடங்​கும். அதேவேளை​யில் 90 ஒரு​நாள் போட்​டிகளில் விளை​யாடி 35.26 சராசரி​யுடன் 2,962 ரன்​கள் சேர்த்​திருந்​தார். இதில் 3 சதங்​கள், 24 அரை சதங்​கள் அடங்​கும். சர்​வ​தேச டி 20-ல் 20 ஆட்​டங்​களில் 375 ரன்​கள் எடுத்​திருந்​தார்.

ரஹானே​வின் கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் மிகச் சிறந்த தருண​மாக அமைந்​தது 2021-ம் ஆண்​டாகும். அப்​போது வழக்​க​மான கேப்​டன் விராட் கோலி இல்​லாத சூழலில் இந்​திய அணியை வழிநடத்​திய ரஹானே, முன்​னணி வீரர்​கள் பலர் காயம் காரண​மாக வெளி​யேறிய நிலை​யிலும், ஆஸ்​திரேலி​யாவை அதன் சொந்த மண்​ணிலேயே 2-1 என்ற கணக்​கில் வீழ்த்தி வரலாற்​றுச் சிறப்​புமிக்க பார்​டர்​-க​வாஸ்​கர் கோப்​பையைக் கைப்​பற்​றிக் காட்​டி​னார்.

அடிலெய்​டில் நடை​பெற்ற முதலா​வது பகல்​-இரவு டெஸ்ட் போட்​டி​யின் 2-வது இன்​னிங்​ஸில் இந்​தியா 36 ரன்​களுக்​குச் சுருண்டு அதிர்ச்​சித் தோல்​வியடைந்​ததைத் தொடர்ந்​து, சொந்த காரணங்​களுக்​காக விராட் கோலி தாயகம் திரும்​பி​னார்.

அதன்​பின்​னர், தொடரின் எஞ்​சிய போட்​டிகளுக்கு ரஹானே கேப்​டன் பொறுப்பை ஏற்​றார். ஜஸ்​பிரீத் பும்​ரா, ரவீந்​திர ஜடேஜா போன்ற முக்​கிய வீரர்​கள் காயம் காரண​மாக வில​கிய​போ​தி​லும், ரஹானே தலை​மையி​லான இந்​திய அணி மன உறு​தி​யோடு போராடித் தொடரைக் கைப்​பற்​றியது.

பிரிஸ்​பனில் உள்ள ‘தி கப்​பா​வில்’ நடை​பெற்ற 4-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்​டி​யில் இந்திய அணி 3 விக்​கெட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற வரலாற்​றுச் சாதனை​யும் இந்​தத் தொடரில்​தான் நிகழ்ந்​தது. இருப்​பினும், இந்​தத் திருப்​பத்​துக்கு தொடக்க புள்ளி 2-வது டெஸ்ட் போட்​டி​தான்.

அதில், அனைத்து முன்​னணிப் பந்​து​வீச்​சாளர்​களை​யும் உள்​ளடக்​கிய வலு​வான ஆஸ்​திரேலிய வேகப்​பந்து வீச்சை எதிர்​கொண்டு மன உறு​தி​யுடன் களத்​தில் நின்ற ரஹானே, இந்​தி​யா​வின் முதல் இன்​னிங்​ஸில் 112 ரன்​கள் குவித்து அசத்​தி​னார்.

மெல்​பர்​னில் நடை​பெற்ற அந்த டெஸ்ட் போட்​டி​யில் இந்​தியா 8 விக்​கெட்​டு​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றி பெற்​றுத் தொடரை 1-1 என சமன் செய்​திருந்​தது. அதன் தொடர்ச்​சி​யாகவே பிரிஸ்​பனிலும்​ வெற்​றி கொடி ​நாட்​டி​யிருந்​தது.

ரஹானே ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணிக்கு அளித்த பங்களிப்பு என்ன?
ஆப்பிரிக்க ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த குல்வீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in