கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து

கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து
Updated on
1 min read

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக் ஷயா சென் ஆகியோர் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர்.

சிங்​கப்​பூரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் ஒலிம்​பிக்​கில் இரு முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, 19-ம் நிலை வீராங்​க​னை​யான ஜப்​பானின் ரிகோ கன்​ஜி​யுடன் மோதி​னார். 37 நிமிடங்​கள் நடைபெற்ற இந்த ஆட்​டத்​தில் சிந்து 21-9, 21-12 என்ற நேர் செட்​டில் எளி​தாக வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ஹெச்.எஸ்.பிர​னாய், 14-ம் நிலை வீர​ரான சிங்​கப்​பூரின் லோகியான் யூவை எதிர்த்து விளை​யாடி​னார். 61 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் 35-ம் நிலை வீர​ரான பிர​னாய் 18-21, 21-16, 15-21 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார். மற்​றொரு ஆட்​டத்​தில் 10-ம் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் லக் ஷயா சென், 2-ம் நிலை வீர​ரான தாய்​லாந்​தின் குன்​ல​வுத் விதித் சரணுடன் மோதி​னார். இதில் லக் ஷயா சென் முதல் செட்​டில் 2-0 என்ற கணக்​கில் முன்னிலை​யில் இருந்த போது காயம் காரண​மாக குன்​ல​வுட் விதித் சரண் வில​கி​னார்.

இதனால் லக் ஷயா சென் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 21-15, 11-21, 21-18 என்ற செட் கணக்​கில் சீன தைபே​வின் லீ ஜெ-ஹுவே, யாங் போ-ஹு​வான் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்​னேறியது. கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் துருவ் கபிலா, தனிஷா கிரஷ்டோ ஜோடி 8-21, 21-17, 21-16 என்ற செட் கணக்​கில் ஜப்​பானின் யுடா வதனாபே, மாயா தகுச்சி ஜோடியை தோற்​கடித்​து கால்​ இறு​தி சுற்​றில்​ கால்​ப​தித்​தது.

கால் இறுதி சுற்றில் பி.வி.சிந்து
கெயில் சாதனை உடைப்பு; சச்சின் பாராட்டு - புதிய ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சூர்யவன்ஷி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in