ராகுல் சாதனையை முறியடித்த பிரியான்ஷ் ஆர்யா

ராகுல் சாதனையை முறியடித்த பிரியான்ஷ் ஆர்யா
Updated on: 
1 min read

இந்தூர்: சையத் அலி முஷ்​டாக் டிராபி கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் டெல்லி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்​தார்.

டெல்லி, தமிழ்​நாடு அணிகளுக்கு இடை​யி​லான இந்த லீக் ஆட்​டம் நேற்று இந்​தூரில் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய டெல்லி அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 275 ரன்​கள் குவித்​தது. இதைத் தொடர்ந்து 276 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய தமிழ்​நாடு அணி 18.3 ஓவர்​களில் 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதைத் தொடர்ந்து 116 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி அணி வெற்றி கண்​டது.

இந்​தப் போட்​டி​யின்​போது டெல்லி வீரர் பிரியான்ஷ் ஆர்யா 68 பந்​துகளில் 7 பவுண்​டரி, 19 சிக்​ஸர்​களு​டன் 181 ரன்​கள் குவித்​தார். இதன்​மூலம் டி20 கிரிக்​கெட் போட்​டிகளில் அதி​கபட்ச ரன்​கள் குவித்த இந்​திய வீரர் கே.எல்.ராகுலின் சாதனையை பிரியான்ஷ் ஆர்யா முறியடித்​தார்.

2026 ஐபிஎல் போட்​டி​யின்​போது பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​கெதிராக, டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்​காக விளை​யாடிய ராகுல் 67 பந்​துகளில் 152 ரன்​கள் குவித்​ததே டி20 போட்​டிகளில் இந்​திய வீரர் ஒரு​வரின் அதி​கபட்ச ரன்​களாக இருந்​தது. தற்​போது 181 ரன்​கள் குவித்து இந்த சாதனையை பிரியான்ஷ் ஆர்யா முறியடித்​துள்​ளார்.

ராகுல் சாதனையை முறியடித்த பிரியான்ஷ் ஆர்யா
தமிழ்நாடு சைக்கிளிங் வீராங்கனைகளுக்கு பரிசு

X