பாகிஸ்தான் வீரர் பாபர் அஸம் | கோப்புப்படம்
துபாய்: பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை ராவல்பிண்டியில் நடைபெற்றது.
இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. கடைசி போட்டியின் 21-வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் சீனியர் பேட்ஸ்மேனான பாபர் அஸம் ஆட்டமிழந்தார். அப்போது விரக்தியில் அவர், மட்டையால் ஸ்டெம்புகளை தாக்கிவிட்டு சென்றார்.
ஐசிசி விதிமுறைகளின் படி இது குற்றமாகும். இது தொடர்பாக களநடுவர்கள் அளித்த புகாரின் பேரில் பாபர் அஸமுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 10 சதவீதத்தை அபராதமாக விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் பாபர் அஸமுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.