

லண்டன்: இங்கிலாந்தின் லண்டன் நகரில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 12-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக், 13-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலியை எதிர்த்து விளையாடினார்.
இதில் மார்த்தா கோஸ்ட்யுக் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் 25-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் நுழைந்தார்.