பும்ரா திணறல்: 260 பந்துகளுக்கும் மேல் விக்கெட் எடுக்க முடியாத பரிதாபம் | IND vs NZ 2nd Test

பும்ரா திணறல்: 260 பந்துகளுக்கும் மேல் விக்கெட் எடுக்க முடியாத பரிதாபம் | IND vs NZ 2nd Test
Updated on: 
2 min read

கிறைஸ்ட் சர்ச் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 356 ரன்களில் ஆகாஷ் தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்த இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 156 பந்துகள் அதாவது 26 ஓவர்கள் விக்கெட் எடுக்காமல், ஒரு இன்னிங்ஸ் முழுதும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் முடிந்து போனது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்துள்ளது .

வெலிங்டன் டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் விக்கெட் எடுக்காமல் 19 ஓவர்கள் வீசிய பிறகு இப்போது 26 ஓவர்கள் வீசியுள்ளார் சுமார் 270 பந்துகள் பும்ரா விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறியுள்ளார். இது இவருக்கு நடப்பது முதல் முறையல்ல.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2021-ம் ஆண்டில் இங்கிலாந்தின் சவுதாம்ட்டனில் நடைபெற்ற போதும் பும்ரா 26 ஓவர்கள் வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்ற முடியாமல் திணறியிருக்கிறார். அதே போல் இங்கிலாந்தில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் 2021-ல் விக்கெட் எடுக்க முடியாமல் ஒரு இன்னிங்ஸை முடித்தார். ஆனால் அதே டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆனால் இப்போது 40 ஓவர்களுக்கும் மேல் வீசியும் பும்ரா விக்கெட் எடுக்காமல் திணறுவது அபாய மணியை ஒலிக்கச் செய்துள்ளது. அவரது பந்து வீச்சு வேகமும் குறைந்திருப்பதாகவும் ‘இவ்வளவு ஸ்லோவாக பும்ரா வீசி பார்த்ததில்லை’ என்று ஆகாஷ் சோப்ராவும் கிரிக் இன்போ பாட்காஸ்ட்டில் அவதானித்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக 19 ரன்கள் என்ற பவுலிங் சராசரி வைத்திருந்த பும்ராவின் பவுலிங் சராசரி இப்போது 20-ஐ தாண்டியுள்ளது. நிறைய ஓய்வு எடுத்துக் கொண்டு ஒரு சில டெஸ்ட் போட்டிகளே ஆடும் பும்ரா வேகம் குறைவாக வீசுவது இந்திய அணிக்கு நல்லதல்ல. அதுவும் சிராஜ் போன்ற முழு உடல்தகுதியும் 100% பங்களிப்பும் செய்யும் வீரரை உட்கார வைத்து அழகுபார்த்துவிட்டு பும்ராவை பரமாரிக்க எடுக்கும் முயற்சி அவர் உடல் தகுதியை ஐபிஎல் தொடருக்கு தயாராக வைத்திருக்கும் முயற்சியாகவே படுகிறது. ஏனெனில் 5 ஓவர்களுக்கு மேல் ஒரு ஸ்பெல்லில் அவருக்கு கில் கொடுப்பதில்லை என்னும் போது அவர் அதில் 100% முழு வேகத்துடன் வீச வேண்டும், ஆனால் பும்ரா வீசவில்லை.

நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் சிராஜை ஒழிப்பதும் பும்ரா போன்ற ஸ்டார் வீரரின் உடல்தகுதியை தனியார் கிரிக்கெட்டுக்காக சர்வதேச கிரிக்கெட் பந்து வீச்சு மேலாண்மையில் பராமரிப்பதும் அமைப்பு ரீதியாக நடைபெறும் ஒன்றோ என்ற சந்தேகம் எழுகிறது. தனது பழைய ஆக்‌ஷனை மாற்றி மரபான வேகப்பந்து வீச்சாளர்கள் போலும் வீசினார் பும்ரா. இதனால் வேகம் 120 கிமீ-க்குக் குறைந்ததையும் பார்க்க முடிந்தது.

இன்னொன்றும் புள்ளி விவரங்கள் ரீதியாகப் பார்க்க வேண்டியுள்ளது. நியூஸிலாந்து அணி பும்ராவுக்கு எப்போதுமே கடினமாக இருந்து வருகிறது. அந்த அணிக்கு எதிராக பும்ராவின் சராசரி 42.28 என்பதும் நியூஸிலாந்து மண்ணில் 4 டெஸ்ட்களில் பும்ராவின் சராசரி 33.90 என்பதாகவும் உள்ளது.

இதில் எச்சரிக்கை மணி என்னவெனில் நல்ல கிரீன் டாப் கிறைஸ்ட் சர்ச் முதல் நாள் பிட்சில் கூட பும்ரா போன்ற ஒரு பவுலர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறியது எதனால் என்பது பும்ரா உட்பட பயிற்சியாளர்கள் தீவிர பரிசீலனை செய்து கொள்ள வேண்டியதைக் கோருகிறது.

பும்ரா திணறல்: 260 பந்துகளுக்கும் மேல் விக்கெட் எடுக்க முடியாத பரிதாபம் | IND vs NZ 2nd Test
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது சுற்றும் டிராவில் முடிந்தது

X