கடைசி டெஸ்டிலும் வெற்றி: தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து

கடைசி டெஸ்டிலும் வெற்றி: தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து
Updated on
1 min read

மவுண்ட் மவுங்கனி: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ரான கடைசி மற்​றும் 3-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் 323 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது.

மவுண்ட் மவுங்​க​னி​யில் உள்ள பே ஓவல் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த டெஸ்ட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி முதல் இன்​னிங்​ஸில் 155 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 575 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது.

டேவன் கான்வே 227, டாம் லேதம் 137 ரன்​கள் விளாசினர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முதல் இன்​னிங்​ஸில் 420 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கவேம் ஹாட்ஜ் 123 ரன்​கள் சேர்த்​தார். 155 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய நியூஸிலாந்து அணி 54 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 306 ரன்​கள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது.

கேப்​டன் டாம் லேதம் 101 ரன்​களும், டேவன் கான்வே 100 ரன்​களும் விளாசினர். இதையடுத்து 462 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 16 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 43 ரன்​கள் எடுத்​தது.

ஜான் கேம்​பல் 2, பிரண்​டன் கிங் 37 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 80.3 ஓவர்​களில் 138 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக பிரண்​டன் கிங் 93 பந்துகளில், 13 பவுண்​டரி​களுடன் 67 ரன்​கள் சேர்த்​தார்.

ஜான் கேம்​பல் 16, கவேம் ஹாட்ஜ் 0, ஷாய் ஹோப் 3, அலிக் அதானஸ் 2, ஜஸ்​டின் கிரீவ்ஸ் 0, கேப்​டன் ராஸ்​டன் சேஸ் 5, கேமர் ரோச் 4, ஆண்​டர்​சன் பிலிப் 10, ஜெய்​டன் சீல்ஸ் 0 ரன்​களில் நடையை கட்​டினர். நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜேக்​கப் டஃபி 5, அஜாஸ் படேல் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர்.

323 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரை 2-0 என கைப்பற்றி கோப்​பையை வென்​றது. கிறைஸ்ட்​சர்ச்​சில் நடைபெற்ற முதல் போட்டி டிரா​வில் முடிவடைந்​திருந்​தது.

வெலிங்​டனில் நடை​பெற்ற 2-வது டெஸ்ட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்று கைப்​பற்​றியதையடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் புள்​ளி​கள் பட்​டியலில் நியூஸிலாந்து அணி 2-வது இடத்​துக்கு முன்​னேறி ​உள்​ளது.

கடைசி டெஸ்டிலும் வெற்றி: தொடரை 2-0 என வென்றது நியூஸிலாந்து
திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும்? - கனிமொழி தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in