கேப் வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா பெயரில் புதிய கடல் வாழ் உயிரினம்

கேப் வெர்டே கால்பந்து அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா

கேப் வெர்டே கால்பந்து அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா

Updated on
1 min read

சென்னை: கேப் வெர்டே கால்பந்து அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா பெயரை புதிதாக கண்டறியப்பட்ட கடல் வாழ் உயிரினத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது அபார ஆட்டத்தின் மூலம் உலக கால்பந்து ரசிகர்கள், ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்தார் வோசின்ஹா.

அதன் மூலம் கேப் வெர்டே இந்த தொடரில் பட்டம் வெல்லக்கூடிய அணிகளாக கருதப்படும் ஸ்பெயின், அர்ஜெண்டினா உள்ளிட்ட அணிகளுக்கு சவால் கொடுத்தது. இத்தனைக்கும் உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அந்த அணி விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.

40 வயதான அவர், இந்த தொடரில் எதிரணியின் கோல் முயற்சிகளை சிறப்பாக தடுத்திருந்தார். ஸ்பெயின் மற்றும் அர்ஜெண்டினா அணிக்கு எதிராக சிறந்த தடுப்பாட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஐம்பதியராமாக இருந்த அவரது இன்ஸ்டா ஃபாலோயர்களின் எண்ணிக்கை பல மில்லியன்களாக உயர்ந்தது.

வோசின்ஹா பெயரை கடல் வாழ் உயிரனத்துக்கு சூட்டிய ஜீசஸ் ஆர்டியா

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான ஜீசஸ் ஆர்டியா, கியூபா கடல் பகுதியில் சுமார் நான்கு மில்லிமீட்டர் அளவு கொண்ட புதிய கடல் வாழ் உயிரினத்தை கண்டறிந்தார். இது குறித்து ஆய்வறிக்கையும் எழுதி இருந்தார். அது சமயம் ஸ்பெயின் அணிக்கு எதிராக ஆட்ட நாயகன் விருதை வோசின்ஹா வென்றிருந்தார். மேலும், கேப் வெர்டே தேசத்துடன் தனக்கு உள்ள தொடர்புக்கு வலு சேர்க்கும் வகையில் அதற்கு வோசின்ஹா பெயரை சூட்டி கவுரவித்துள்ளார். இதன் மூலம் அந்த உயிரினம் ‘அல்டிசா வோசின்ஹா’ என இப்போது அறியப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த 2019-ல் ஆர்டியா கண்டறிந்த கடல் நத்தை உயிரினத்துக்கு ரியல் மாட்ரிட் மற்றும் கோஸ்டாரிகா அணியின் கோல்கீப்பர் கெய்லர் நவாஸ் பெயரை சூட்டியது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>கேப் வெர்டே கால்பந்து அணியின் கோல்கீப்பர் வோசின்ஹா</p></div>
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in