நேஷன்ஸ் லீக்: 7-0 மோசமான தோல்வியை துடைத்தெறியுமா குரேஷியா? - இங்கிலாந்துடன் மோதல்

நேஷன்ஸ் லீக்: 7-0 மோசமான தோல்வியை துடைத்தெறியுமா குரேஷியா? - இங்கிலாந்துடன் மோதல்
Updated on: 
2 min read

2026-27 யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 1.15 மணியளவில் நடைபெறும் கால்பந்து போட்டியில் குரேஷியா அணி, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சோனி நெட்வொர்க் தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது

அக்டோபர் 3-ம் தேதி இதே போட்டித் தொடருக்காக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரேஷியா சென்ற இங்கிலாந்து அன்று ரிஜேகா மைதானத்தில் குரேஷியாவை 7-0 என்ற கோல் கணக்கில் பந்தாடியது இங்கிலாந்து. குரேஷிய தேசியக் கால்பந்து வரலாற்றில் இத்தகைய அவமானகரமான தோல்வியை அந்த அணி எந்த அணிக்கு எதிராகவும் சந்தித்ததில்லை. அன்று ஹாரி கேன், சாக்கா தலா 2 கோல்களை அடிக்க பெலிங்காம், அந்தோனி கார்டன், மார்கன் ராஜர்ஸ் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்நிலையில், இன்று குரேஷியா - இங்கிலாந்து அணி இன்று இரவு மீண்டும் மோதுகிறது. 7-0 உதை தேசிய அவமானத்தை குரேஷியா துடைத்தெறியுமா என்பதே இப்போது குரேஷிய ரசிகர்களின் பழிவாங்கும் எதிர்பார்ப்பாக உள்ளது.

குரோஷியா ஒரு பலவீனமான அல்லது திறமையற்ற அணியாகத் தெரியவில்லை. சொல்லப்போனால், அது ஓர் அணியாகவே தெரியவில்லை. அந்த இரவு நடந்த ஆட்டத்தைப் பற்றிய மிகச் சரியான மதிப்பீடுகள், அந்த அணியிலிருந்தே வெளிப்பட்டன.

அன்று 7-0 உதையின் போது கேப்டன் லூகா மோட்ரிச் கூறும்போது, “நான் இதைச் சொல்லியே ஆக வேண்டும். நான் கடந்த 20 ஆண்டுகளாக இந்த அணியில் இருக்கிறேன். ஆனால் இவ்வளவு அவமானமாக உணர்வது இதுவே முதல் முறை. ஒரு போட்டியில் தோற்பது பெரிய விஷயமல்ல; தற்போதைய நிலையில் அவர்கள் நம்மை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலம் கடினமாக உழைத்து நாம் கட்டியெழுப்பிய நற்பெயரை இப்படிச் சிதைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

ஆனால், இந்த பேருதைக்குப் பிறகே உலக சாம்பியன்களுடன் ஆடிய குரேஷியா அந்தப் போட்டியில் 2-1 என்று கடும் சவால் அளித்த பிறகே தோற்றது. 17வது நிமிடத்தில் குரேஷிய நட்சத்திரம் பெரிசிச் அபார கோலினால் முன்னிலை கொடுத்தார். ஆனால் உலக சாம்பியனான ஸ்பெயின் 2வ்து பாதியில் மிகேல் மெரினோ மூலம் 2 கோல்களைத் திணித்து குரேஷிய ஆசையைத் தகர்த்தது.

ஆகவே இங்கிலாந்திடம் அந்த 7-0 உதை என்ற பெரிய துயரக்கதை மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும், ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டம் நிச்சயம் குரேஷியாவிடம் புதிய தெம்பைப் புகுத்தியிருக்கும் என்று நம்பலாம்.

சமீபத்திய வேதனை தரும் துயரங்களுக்குப் பிறகும், குரோஷியா இன்னமும் ஓர் உண்மையான அணிதான். அதாவது, அதன் புகழ்பெற்ற கடந்த காலத்துக்குத் தகுதியானதும், எதிர்காலத்தின் மீது நம்பிக்கையுள்ளதுமான ஓர் அணி என்பதை நிரூபிப்பதே உண்மையான சவாலாகும். இன்று நள்ளிரவு ஆட்டம் தொடங்கிய பிறகே இது தெரிந்துவிடும்.

நேஷன்ஸ் லீக்: 7-0 மோசமான தோல்வியை துடைத்தெறியுமா குரேஷியா? - இங்கிலாந்துடன் மோதல்
“மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் சொல்வது போல் நடக்காது” - அமைச்சர் ஆனந்த்

X