

போபால்: தேசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பெங்களூருவைச் சேர்ந்த வீராங்கனை திலோத்தமா சென் தங்கம் வென்றார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நேற்று நடைபெற்ற இப்பிரிவு போட்டியில் திலோத்தமா சென் 466.9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். கேரள வீராங்கனை விதர்சா கே. வினோத் 462.9 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். ரயில்வேஸ் வீராங்கனை அயோனிகா பால் 451.8 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஜூனியர் மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ராணுவ வீராங்கனை ரிதுபர்ணா தேஷ்முக் 458.6 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கத்தைக் கைப்பற்றினார்.
ஹரியானாவின் நிஷ்சல் 458.1 புள்ளிகளுடன் 2-ம் இடத்தையும், கர்நாடகாவின் அனுஷ்கா தோக்குர் 447.6 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் கைப்பற்றினர்.