

விஜயவாடா: தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவின் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு ஸ்ருதி முண்டாலா, தன்வி பத்ரி ஆகியோர் முன்னேறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 87-வது தேசிய சீனியர் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு போட்டியில் ஸ்ருதி முண்டாலா 21-14, 21-9 என்ற புள்ளிகள் கணக்கில் ஜியா ராவத்தை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு மகளிர் பிரிவு ஆட்டத்தில் தன்வி பத்ரியும், இஷாராணி பரூவாவும் மோதினர். இதில் தன்வி பத்ரி 22-20, 21-19 என்ற கணக்கில் 8-ம் நிலை வீராங்கனையான இஷாராணியை வீழ்த்தினார். இதையடுத்து தன்வி பத்ரியும் கால் இறுதிக்கு முந்தையச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.