

சாம்பியன் பட்டம் வென்ற எல்லோ டிரைன் பள்ளி மாணவிகள்.
சென்னை: ஐஎஸ்எஸ்ஓ தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்ட மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த எல்லோ டிரைன் பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கடந்த 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற்றன. நாடு முழுவதிலும் இருந்து 46 பள்ளிகளைச் சேர்ந்த 51 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் எல்லோ டிரைன் பள்ளி அணி 58-40 என்ற புள்ளிகள் கணக்கில் தி ஸ்ரீராம் பள்ளி அணியை வீழ்த்தி பட்டம் வென்றது.
இறுதிப் போட்டியில் கேப்டன் ஆர். பிரபன்யா, வீராங்கனை கிரிதி உள்ளிட்டோர் புள்ளிகளைச் சேர்த்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். சாம்பியன் பட்டம் வென்ற பள்ளி வீராங்கனைகளுக்கு பள்ளி நிறுவனர் சி.ஜே.விக்ரம், நிர்வாகி சந்தியா விக்ரம் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.