

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இந்த மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் பி.வி. சிந்து 21-14, 22-20 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே வீராங்கனை சுங் ஷுவோ யுன்னை வீழ்த்தினார்.
51 நிமிடங்களில் இந்த ஆட்டம் முடிவுக்கு வந்தது.கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 15-21, 21-18, 15-21 என்ற கணக்கில் அமெரிக்காவின் பிரஸ்லீ ஸ்மித், ஜென்னி கை ஜோடியிடம் தோல்வி கண்டது.