குத்துச்சண்டையில் தங்கம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன் @ ஆசிய விளையாட்டு போட்டி

லவ்லினா போர்கோஹைன்

லவ்லினா போர்கோஹைன்

Updated on: 
1 min read

நகோயா: நடப்பு ஆசிய விளையாட்டு போட்டி குத்துச்சண்டையில் மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன்.

இன்று (அக்.2) நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீனாவின் பாவோ ஜியியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார். ஆக்ரோஷமாக ஆடும் பாவோ ஜியியை முன்னோக்கி ஆட வைத்து, வாய்ப்பு கிடைக்கும் போது பதில் தாக்குதல் கொடுத்தார் லவ்லினா. அதன் மூலம் தங்கத்தை அவர் வசமாக்கினார்.

முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் நடாலியாவை 3-2 என்ற கணக்கில் லவ்லினா வீழ்த்தினார்.

பிறந்தநாளில் தங்கம் வென்றார்

கடந்த 1997-ல் இதே நாளில் (அக்.2) பிறந்தவர் லவ்லினா. அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த முறை ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்றிருந்தார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், 2022 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2023-ல் உலக சாம்பியன் பட்டம், 2026 காமன்வெல்த் போட்டியில் வெள்ளியும் அவர் வென்றுள்ளார். அவரது செயல்பாட்டுக்காக 2020-ல் அர்ஜுனா விருது, 2021-ல் கேல் ரத்னா விருதும் அவருக்கு வழங்கியது இந்திய அரசு.

நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் 70 பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது. இதில் 12 தங்கம், 24 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் அடங்கும்.

<div class="paragraphs"><p>லவ்லினா போர்கோஹைன்</p></div>
‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - பலன்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in