ஒரே ஒரு போட்டியை மட்டும் வைத்து குல்தீப்பின் திறனை தீர்மானிக்க முடியாது: சாய்ராஜ் பகுதுலே கருத்து

குல்தீப் யாதவ், சாய்ராஜ் பகுதுலே

குல்தீப் யாதவ், சாய்ராஜ் பகுதுலே

Updated on
1 min read

கொழும்பு: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இரு இன்னிங்ஸிலும் கூட்டாக 25 ஓவர்களை வீசி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினார்.

அதேவேளையில் மற்ற சுழற்பந்து வீச்சாளர்களான மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கூட்டாக 14 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இதனால் நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்பது சந்தேகமாகி உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளரான சாய்ராஜ் பகுதுலே கூறியதாவது:

குல்தீப் யாதவ் சிறப்பாகவே பந்து வீசி வருகிறார். காலே போட்டியில் சூழ்நிலைக்கு தகுந்தபடி அவர் செயல்பட வேண்டியது இருந்தது. குல்தீப் யாதவ் எப்போதுமே வெற்றியை தேடி தரக்கூடிய வீரர். இந்திய அணியின் எதிர்கால திட்டங்களில் அவர், இடம்பெற்றுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்கள் அனைவரும் மென்மையான பந்தால் சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால், விரல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு (இடதுகை சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது ஆஃப் ஸ்பின்னர்கள்) அது சற்று எளிதாகிறது. லெக் ஸ்பின்னர்களுக்குப் பந்தின் மென்மைத்தன்மை காரணமாக இன்னும் கடினமாகிறது, ஏனெனில் பந்தின் தையல் தட்டையாகிவிடுகிறது.

விரல் சுழற்பந்து வீச்சாளர்களால் தங்களது விரல்களைப் பயன்படுத்தி, அவர்கள் விரும்பும் வேகத்தில் பந்தை வீச முடியும். ஆனால், ரிஸ்ட் ஸ்பின்னருக்கு இது மிகவும் கடினமான சவாலாகும். எனவே, ஒரே ஒரு போட்டி மட்டுமே குல்தீப் யாதவின் செயல் திறனையோ அல்லது அவரது அணுகுமுறையையோ தீர்மானித்துவிடாது என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு சாய்ராஜ் பகுதுலே கூறினார்.

<div class="paragraphs"><p>குல்தீப் யாதவ், சாய்ராஜ் பகுதுலே</p></div>
‘முதல் இன்னிங்ஸ் போட்டு அறுத்துட்ட, கொஞ்சம் ஷாட் ஆடு’ - திக்வெல்லாவைக் கலாய்த்த ஜெய்ஸ்வால்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in