கருண் நாயர், படிக்கல் சதம்: கர்நாடக அணிக்கு சிறப்பான வெற்றி

கருண் நாயர், படிக்கல் சதம்: கர்நாடக அணிக்கு சிறப்பான வெற்றி
Updated on
1 min read

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்​பைக்​கான போட்​டி​யில் கர்​நாடக அணி 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் கேரளாவை வீழ்த்தி சிறப்​பான வெற்​றியைப் பதிவு செய்​தது. கர்​நாடக அணி வீரர்​கள் கருண் நாயர், தேவ்​தத் படிக்​கல் ஆகியோர் அபார​மாக விளை​யாடி சதமடித்​தனர்.

இந்​தப் போட்டி அகம​தா​பாத்​தி​லுள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் விளை​யாடிய கேரள அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 284 ரன்​கள் குவித்​தது. கேரள அணி​யின் அபராஜித் 71 ரன்​கள் குவித்​தார்.

பின்​னர் விளை​யாடிய கர்​நாடக அணி 48.2 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 285 ரன்​கள் குவித்து வென்றது. தேவ்​தத் படிக்​கல் 137 பந்​துகளில் 127 ரன்​கள் குவித்து அவுட்​டா​னார். கருண் நாயர் 130, ஸ்மரன் ரவிச்​சந்​திரன் 25 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். இதன்​மூலம் 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் கர்​நாடக அணி வெற்றி கண்​டது.

இதர ஆட்​டங்​கள்: இதர ஆட்​டங்​களில் கோவா அணி 8 ரன்​கள் வித்​தி​யாசத்​தில இமாச்சல பிரதேச அணி​யை​யும், பஞ்​சாப் அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சத்​தீஸ்​கர்

அணி​யை​ தோற்கடித்தது. ஹரி​யானா அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் சவு​ராஷ்டிரா அணி​யை​யும், ஆந்​திர அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் ரயில்​வேஸை​யும், மத்​திய பிரதேச அணி 2 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் தமிழ்​நாடு அணி​யை​யும், ஜம்​மு-காஷ்மீர் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அசாம் அணியையும் வென்றன.

விஜய் ஹசாரே கோப்பை: உத்தராகண்டை வீழ்த்தியது மும்பை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in