ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து: தமிழ்நாடு அணி அபார வெற்றி

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின.

ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின.

Updated on
1 min read

அனந்தபூர்: ஆந்திர மாநிலம் அனந்தபூரில் ஜூனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஆந்திரா அணிகள் மோதின. இதில் தமிழ்நாடு மகளிர் அணி 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஜி.நயனா (1, 22, 28-வது நிமிடங்கள்), எஸ்.தர்ஷினி (33, 35, 85-வது நிமிடங்கள்), அன்விடா ரகுராமன் (45+3, 60, 70-வது நிமிடங்கள்), பா.பிரபா (26, 45, 90+1-வது நிமிடங்கள்) ஆகியோர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினர். தமிழ்நாடு அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (20-ம் தேதி) ராஜஸ்தானுடன் மோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in