“பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர்” - இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பாராட்டு

“பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர்” -  இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பாராட்டு
Updated on
2 min read

மும்பை: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் வேகப்​பந்து வீச்சாள​ரான ஜஸ்​பிரீத் பும்ரா தற்​போதைய நிலை​யில் எல்லா காலத்​துக்​கு​மான சிறந்த பந்​து​வீச்​சாளர் என இங்கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் பாராட்டியுள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்​று​முன்​தினம் மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெற்ற அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி 7 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இங்​கிலாந்து அணியை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. இந்த ஆட்டத்தில் இந்​திய அணி 253 ரன்​களை குவித்த போதி​லும் இங்​கிலாந்து அணி கடைசி ஓவர் வரை அச்​சுறுத்​தல் கொடுத்​திருந்​தது.

48 பந்​துகளில், 105 ரன்​களை வேட்​டை​யாடிய 22 வயதான இளம் பேட்​ஸ்​மே​னான ஜேக்​கப் பெத்​தேல் கடைசி ஓவரின் முதல் பந்​தில் ரன் அவுட் ஆன பின்​னரே இந்​திய அணி வெற்​றியை நோக்கி பயணித்​தது. அதி​லும் கடைசி ஓவரை வீசிய ஷிவம் துபே நோபால் ஏதும் வீசி​விடக்​கூ​டாதே என ரசிகர்​கள் பயத்​துடனே இருக்​கை​யின் நுனிக்கே வந்து போட்​டியை பார்​வை​யிட்​டனர்.

ஒரு கட்​டத்​தில் இங்​கிலாந்து அணி வெற்றி பெறு​வதற்கு ஓவருக்கு சராசரி​யாக 13.80 ரன்​களே தேவை​யாக இருந்தன. அப்​போது 16-வது ஓவரை வீசிய பும்ரா தனது துல்​லிய​மான யார்க்​கர்​களை அபார​மாக வீசி 8 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார். தொடர்ந்து 18-வது ஓவரை வீசிய அவர், மீண்​டும் அற்​புத​மாக வீசி 6 ரன்​களை மட்டுமே வழங்​கி​னார். இந்த 2 ஓவர்​களும் இந்​திய அணிக்கு பெரிய திருப்​பு​முனையை ஏற்​படுத்​திக் கொடுத்தன.

போட்டி முடிவடைந்​தும் இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் கூறிய​தாவது: இந்​திய அணியை வீழ்த்​து​வது கடினம். அவர்​களிடம் எல்லா இடங்​களில் இருந்​தும் பேட்​ஸ்​மேன்​கள் வரு​கிறார்​கள். பந்​துகளை துல்​லிய​மாக விளாசக்​கூடிய சில வீரர்​களும் இந்​திய அணி​யில் உள்​ளனர். தவறான பந்​துகளை வீசி​னால் சிக்​ஸர் அல்​லது பவுண்​டரி விளாசி​விடு​கிறார்​கள்.

துர​திருஷ்ட​வச​மாக நாங்​கள் திட்​டங்​களை சரி​யாக செயல்​படுத்த முடி​யாமல் போனது. அது​வும் சில கேட்ச்களை தவற​விட்​டதும் எங்​களை சற்று பாதித்​தது. ஜஸ்​பிரீத் பும்ரா சிறந்த பந்​து​வீச்​சாளர். தற்​போதைய நிலை​யில் அவர், எல்லா காலத்​துக்​கு​மான சிறந்த பந்துவீச்சாளர்.

பும்ரா நீண்ட கால​மாகவே சிறந்த பந்​து​வீச்​சாள​ராக இருக்கிறார். இந்​திய அணி வீரர்​கள் மிகச் சிறப்​பாக ஃபீல்டிங்​கும் செய்​தனர், அக்​சர் படேல் என்னை ஆட்டமிழக்​கச் செய்த கேட்ச் நான் பார்த்த சிறந்த கேட்ச்களில் ஒன்​று. அவர்​களுக்கு தலை வணங்​கு​கிறேன்.

இந்த தோல்வி ஏமாற்​றம் அளிக்​கிறது. ஆனால் ஒட்டுமொத்த​மாக இந்த தொடரில் நாங்​கள் செயல்பட்டவிதத்தை நினைத்​தால் மிக​வும் பெரு​மை​யாக இருக்​கிறது. உண்​மை​யைச் சொல்​லப் போனால் ஒரு கேப்ட​னாக இதை​விட அதி​க​மாக எதை​யும் எதிர்​பார்க்க முடி​யாது. இந்த உலகக் கோப்பை பயணம் எங்​களுக்கு அற்​புத​மாக இருந்​தது.

நான் முன்பு கூறியது போல், நாங்​கள் ஒரு​போதும் ஆட்டங்களில் இருந்து வெளி​யேற​வில்​லை. அது இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தி​லும் நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. கடைசி ஓவர் வரை நாங்​கள் ஆட்​டத்​தில் இருந்​தோம். அணி​யில் உள்ள வீரர்​களை நினைத்து மிக​வும் பெருமைப்படு​கிறேன். அவர்​களும் தங்​களைப் பற்றி மிகவும் பெருமைப்பட வேண்​டும்.

ஜேக்​கப் பெத்​தேல் அற்​புத​மான வீரர். இந்​தி​யா​வுக்கு எதிராக அவர்​களின் சொந்த மைதானத்​தில் அதிக அழுத்தமான சூழ்​நிலை​யில் அவர், விளை​யாடிய விதம் மிக​வும் அற்​புத​மானது. இங்​கிலாந்து அணி​யில் அவருக்கு சிறப்​பான எதிர்​காலம் உள்​ளது. எதிர்​காலத்​தில் அவருடன் நிறைய நேரம் செல​விட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பொது​வாக சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக எங்​களது ஆட்டத்தை விமர்​சிப்​பார்​கள், இப்​போது பாராட்டு கிடைப்பது சிறந்த விஷ​யம். வருண் சக்​ர​வர்த்தி பந்​து​வீச்சை நாங்​கள் புரிந்து கொண்டு புத்​தி​சாலித்​தன​மாக ரன்​கள் குவித்​தோம். எங்​கள் அணி​யின் பயிற்​சி​யாள​ராக பிரண்​டன் மெக்​கலம் தொடரு​வதற்கு நான் 125 சதவீதம் ஆதரவு கொடுப்​பேன்.

அவர், என் வாழ்க்​கை​யில் நான் சந்​தித்த சிறந்த பயிற்சியாளர். அனை​வரும் அவரை மதிக்​கிறார்​கள். அவர், வீர​ராக செய்​தவை அபாரம், அதை பயிற்​சி​யிலும் கொண்டு வந்​துள்​ளார். கடந்த 4 ஆண்​டு​களில் இங்கிலாந்து கிரிக்​கெட்​டை சிறப்​பாக மாற்​றி​யுள்​ளார்​. இவ்வாறு ஹாரி புரூக் கூறினார்.

அரை இறு​தியை கண்​டு​களித்த 65.2 மில்​லியன் பார்வையார்​கள் அகம​தா​பாத் ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் இந்தியா - இங்​கிலாந்து அணி​கள் மோதிய அரை இறுதி ஆட்​டத்தை ஜியோஸ்​டார் தளத்​தில் ஒரே நேரத்​தில் அதிகபட்​ச​மாக 65.2 மில்​லியன் பார்​வை​யாளர்​கள் பார்வையிட்​டுள்​ள​தாக சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக ஐசிசி தலை​வர் ஜெய் ஷா தனது எக்​ஸ்​ வலைதள பதி​வில், “இந்​தியா - இங்​கிலாந்து மோதிய அரையிறுதி போட்டி டிஜிட்​டல் பார்​வை​யாளர்​களில் உலகச் சாதனையை முறியடித்​துள்​ளது. இந்த போட்​டியை ஜியோஸ்​டார் தளத்தில் ஒரே நேரத்​தில் 65.2 மில்​லியன் பார்​வை​யாளர்​கள் பார்த்​துள்​ளனர். இது உலகில் எந்த நேரடி நிகழ்ச்​சிக்​கும் கிடைக்​காத அதிக டிஜிட்​டல் பார்வையாளர் எண்​ணிக்கை ஆகும்.” எனத் தெரி​வித்​துள்​ளார்​.

“பும்ரா மிகச் சிறந்த பந்துவீச்சாளர்” -  இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் பாராட்டு
யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்து மதுரை ராஜேஸ்வரி சாதனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in