ஜப்பான் ஓபன் பாட்மிண்டனில் பி.வி.சிந்து சாம்பியன்!

ஜப்பான் ஓபன் பாட்மிண்டனில் பி.வி.சிந்து சாம்பியன்!
Updated on
1 min read

டோக்​கியா: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்​டி​யின் மகளிர் பிரி​வில் இந்​திய வீராங்​கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​துள்​ளார்.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்​கியா​வில் நடைபெற்று வரு​கிறது. இதில் இந்​தி​யா, சீனா, ஜப்​பான், இந்தோனேசியா உள்பட பல்​வேறு நாடு​களை சேர்ந்த முன்​னணி வீரர், வீராங்​க​னை​கள் பங்​கேற்று விளை​யாடி வந்​தனர். இந்​தியா சார்​பில் லக்​சயா சென், ஆயுஷ் ஷெட்​டி, பிவி சிந்​து, உன்​னதி ஹூடா, சிராக் ஷெட்​டி-​சாத்விக் ராங்​கிரெட்டி ஜோடி, தனிஷா கிரஸ்​டோ-துருவ் கபிலா ஜோடி உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர்.

மகளிர் ஒற்​றையர் பிரிவுக்கு தகுதி பெற்​றதன் மூலம் ஜப்​பான் ஓபன் பாட்​மிண்​டன் தொடரின் இறு​திப்​போட்​டிக்கு முன்​னேறிய முதல் இந்​திய வீராங்​கனை என்ற பெரு​மை​யைப் பெற்​றார் பி.​வி.சிந்​து. இந்​நிலை​யில், நேற்று நடை​பெற்ற மகளிர் ஒற்​றையர் பிரி​வின் இறு​திப்​போட்​டி​யில் இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, ஜப்பானின் அகானே யமகுச்​சி​யுடன் மோதி​னார்.

இந்​தப் போட்​டி​யில் பி.​வி.சிந்து 21-17, 21-17 என்ற செட் கணக்​கில் வென்று சாம்​பியன் பட்​டத்​தைக் கைப்​பற்றி அசத்​தல் சாதனை புரிந்​தார். ஒலிம்​பிக்​கில் 2 முறை பதக்​கம் பெற்​றவ​ரான பிவி சிந்து கடந்த 2 ஆண்​டாக சர்​வ​தேச பட்​டம் எது​வும் வெல்​லாத நிலை​யில், தற்​போது ஜப்​பான் ஓபனில் சாம்​பியன் பட்​டம் வென்று அனை​வரின் பாராட்​டு​களை​யும் பெற்​றுள்​ளார். அவர் கடைசி​யாக கடந்த 2024-ம் ஆண்​டில் நடை​பெற்ற சையத் மோடி சர்​வ​தேச பாட்​மிண்​டன் தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தார்.

மேலும் ஜப்​பான் ஓபன் பாட்​மிண்​டனில் பட்​டம் வெல்​லும் முதல் இந்​திய வீராங்​கனை என்ற பெரு​மை​யை​யும் பி.​வி.சிந்து பெற்றார். இதைத் தொடர்ந்து பி.​வி.சிந்​து​வுக்கு மத்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், தெலங்​கானா முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, ஆந்​திரா முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு உள்ளிட்டோர் பாராட்​டு​களை தெரி​வித்​துள்​ளனர்.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டனில் பி.வி.சிந்து சாம்பியன்!
அர்ஜெண்டினாவை வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் ஆனது ஸ்பெயின் | FIFA WC 2026 Final

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in