விளையாட்டு துளிகள்: காஷ்மீர் ரன் குவிப்பு முதல் குகேஷ் டிரா வரை

விளையாட்டு துளிகள்: காஷ்மீர் ரன் குவிப்பு முதல் குகேஷ் டிரா வரை
Updated on
1 min read

ஹூப்ளி: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் இறு​திப் போட்​டி​யில் கர்​நாடகா - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் கர்​நாடக மாநிலம் ஹூப்​ளி​யில் விளை​யாடி வரு​கின்​றன. டாஸ் வென்று பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 87 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 284 ரன்​கள் எடுத்​தது.

நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 173.1 ஓவர்​களில் 584 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. ஷுபம் பண்​டிர் 121, அப்​துல் சமத் 61 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கர்​நாடகா அணி சார்​பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

இதையடுத்து பேட் செய்த கர்​நாடகா அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 69 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 220 ரன்​கள் எடுத்​தது. மயங்க் அகர்​வால் 130, கிருத்​திக் கிருஷ்ணா 27 ரன்​களுடன் களத்​தில் உள்ளனர்.

இந்திய, ஆஸி. அணிகள் இன்று மோதல்

இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் பிரிஸ்​பனில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் ஆஸ்​திரேலிய அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இதன் மூலம் அந்த அணி ஒரு​நாள் போட்​டித் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. இந்​நிலை​யில் 2-வது ஆட்​டம் இன்று ஹோபர்ட்​டில் உள்ள பெல்​லெரிவ் ஓவல் மைதானத்​தில் காலை 9.20 மணிக்கு நடை​பெறுகிறது.

முதல் சுற்றை டிரா செய்தார் குகேஷ்

செக் குடியரசின் பிராக் நகரில் பிராக் சர்​வ​தேச செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் மாஸ்​டர்ஸ் பிரி​வில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் குகேஷ், அமெரிக்​கா​வின் ஹான்ஸ் மோக் நீமனுடன் மோதி​னார்.

62-வது நகர்த்​தலின் போது இந்த ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது. நடப்பு சாம்​பி​யான இந்​தி​யா​வின் அர்​விந்த் சிதம்​பரம் தனது முதல் சுற்​றில் உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக்கிடம் தோல்வி அடைந்​தார்.

விளையாட்டு துளிகள்: காஷ்மீர் ரன் குவிப்பு முதல் குகேஷ் டிரா வரை
விஜய் வருகையும், பள்ளி மாணவர்களின் ‘திடீர்’ அரசியல் ஆர்வமும் - ஆரோக்கியமா, ஆபத்தா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in