சென்னை சூப்பர் கிங்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜேம்ஸ் ஃபோஸ்டர் நியமனம் | IPL 2026

ஜேம்ஸ் ஃபோஸ்டர்

ஜேம்ஸ் ஃபோஸ்டர்

Updated on
1 min read

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஃபோஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இதை சிஎஸ்கே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இங்கிலாந்து அணிக்காக 7 டெஸ்ட், 12 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் ஃபோஸ்டர் விளையாடி உள்ளார். சர்வதேச அளவிலும், ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐஎல்டி20 லீக் தொடரில் அவரது பயிற்சியின் கீழ் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தி ஹன்ட்ரட் லீக் கிரிக்கெட்டில் பர்மிங்காம் பீனிக்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக உள்ளார்.

சர்வதேச அளவில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முன்னதாக, கடந்த 2020 முதல் 2023 வரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

45 வயதான ஜேம்ஸ் ஃபோஸ்டர், சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, பந்துவீச்சு ஆலோசகராக உள்ள எரிக் சிம்மன்ஸ் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த சீசனில் வரும் 30-ம் தேதி அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி அதன் முதல் போட்டியில் விளையாடுகிறது.

ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, இந்த சீசனில் முற்றிலும் புது பாய்ச்சல் உடன் களம் காண உள்ளது. உள்ளூர் அளவில் அசத்தும் இளம் வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் கொண்ட வீரர்களை சிஎஸ்கே கொண்டுள்ளது. அதிரடி பேட்டிங் மற்றும் தரமான பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே கொண்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஜேம்ஸ் ஃபோஸ்டர்</p></div>
“பாகிஸ்தான் வீரர்களை வாங்குவது...” - சன்ரைசர்ஸ் அணி நிர்வாகத்தை சாடிய கவாஸ்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in