

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் கேரள அணியை வெற்றி கண்டது. அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய தமிழக அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது.
கேப்டன் என்.ஜெகதீசன் 126 பந்துகளில் 139 ரன்கள்(9 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்தார். பின்னர் விளையாடிய கேரள அணி 40.2 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. தமிழ்நாடு அணி வீரர்கள் சச்சின் ராத்தி, முகமது அலி ஆகியோர் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றினர்.