கால்பந்து: சென்னை​ - மும்பை இன்று மோதல்

கால்பந்து: சென்னை​ - மும்பை இன்று மோதல்
Updated on
1 min read

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து எஃப்சி அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பை சிட்டி எஃப்சியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு மும்பை கால்பந்து மைதானத்தில் நடைபெறுகிறது. இம்முறை சென்னை அணியின் பயிற்சியாளராக கிளிஃபோர்ட் மிராண்டா உள்ளார்.

ப்ரீதம் கோடல், மந்தர் ராவ் தேசாய், எல்சின்ஹோ, ஆல்பர்டோ நோகுவேரா முகமது அலி ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஐஎஸ்எல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் சென்னை அணி 7 ஆட்டங்களிலும், மும்பை அணி 16 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிவடைதிருந்தன.

கால்பந்து: சென்னை​ - மும்பை இன்று மோதல்
“மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in