வெற்​றிப் பாதைக்கு திரும்​புமா மும்பை இந்தியன்ஸ்? - இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்

வெற்​றிப் பாதைக்கு திரும்​புமா மும்பை இந்தியன்ஸ்? - இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
Updated on
2 min read

மும்பை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​கள் மோதுகின்​றன.

ஹர்​திக் பாண்​டியா தலை​மையி​லான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் 103 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் படு​தோல்வி அடைந்​திருந்​தது. அந்த ஆட்​டத்​தில் 208 ரன்​கள் இலக்கை துரத்​திய மும்பை இந்​தி​யன்ஸ் அணி 104 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​திருந்​தது.

டி20 உலகக் கோப்​பையை வென்ற இந்​திய அணி​யில் இடம்​பெற்ற நான்கு வீரர்​கள் மும்பை இந்​தி​யன்ஸ் அணியில் உள்ள போதி​லும் அவர்​களிடம் இருந்து உயர்மட்ட செயல் திறன் வெளிப்​ப​டாதது அணியை பலவீன​மாக்கி உள்​ளது. கேப்​டன் ஹர்​திக் பாண்​டியா பேட்டிங்​கில் 97 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். அதேவேளை​யில் பந்​து​வீச்​சில் 3 விக்​கெட்​டு​களை மட்​டுமே கைப்​பற்​றி​யுள்​ளார். சூர்​யகு​மார் யாதவ் 110 ரன்​களே எடுத்துள்​ளார்.

திலக் வர்​மா, குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் மட்டும் சிறப்​பாக விளை​யாடி சதம் அடித்​திருந்​தார். அவரது சிறப்​பான ஆட்​டம் மும்பை அணி​யின் தொடர்ச்சியான 4 தோல்வி​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்க மட்​டுமே உதவியது. இருப்​பினும், சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணி​யின் மிகப்​பெரிய தோல்​வி, தடுமாறிக் கொண்​டிருக்​கும் அவர்​களின் இந்த சீசனை மீண்​டும் சரிவுக்​குள் தள்​ளி​யுள்​ளது.

அதே நேரம் ரோஹித் சர்மா இல்​லாதது பெரிய இடைவெளியை உரு​வாக்​கி​யுள்​ளது. கடந்த 2 போட்டிகளில் டேனிஷ் மாலே​வா​ரால் (2, 0) அந்த இடத்தை நிரப்ப முடிய​வில்​லை. தொடை​யில் ஏற்​பட்ட தசைப்​பிடிப்பு காரண​மாக ஓய்​வில் இருக்​கும் ரோஹித் சர்மா இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கு​வாரா என்​பது நேற்று மாலை வரை உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை. மும்பை இந்​தி​யன்ஸ் அணியின் பந்​து​வீச்​சும் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்படுத்த​வில்​லை. ஜஸ்​பிரீத் பும்ரா 2 விக்​கெட்​கள் மட்டுமே கைப்​பற்​றி​யுள்​ளார்.

வழக்​க​மாக விக்​கெட்​டு​களை வீழ்த்​து​வதற்​காக மிடில்​-ஓவர்​களி​லும், எதிரணி​யின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதற்​காக இறு​திக்​கட்ட ஓவர்​களி​லும் பயன்படுத்​தப்​படும் பும்​ரா, கடந்த இரண்டு போட்​டிகளாக தொடக்க ஓவர்​களை வீசி​னார். ஆனால் அதற்​கும் பெரிய அளவில் பலன்​கிடைக்​க​வில்​லை. டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர் உள்​ளிட்ட மற்ற அனைத்து பந்​து​வீச்​சாளர்​களுமே பவர்​பிளே​வில் விக்​கெட்​களை வீழ்த்த சிரமப்​பட்டு வருகின்​றனர்.

குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அஷ்வனி குமார் 4 விக்​கெட்​களை வீழ்த்தி ஆறு​தல் அளித்​தார். ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அவரால் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்த முடி​யாமல் போனது. காயமடைந்த மிட்​செல் சான்ட்​னருக்​குப் பதிலாக கேசவ் மகா​ராஜ் அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

எனினும் இன்​றைய ஆட்​டத்​தில் ஆல்​ர​வுண்​ட​ரானவில் ஜாக்​ஸிற்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்​ளது. சமீபத்​தில் நடை​பெற்ற டி20 உலகக் கோப்​பை​யில் அவர், சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தார்.சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, 3 தோல்வி​களுடன் பட்​டியலில் 10 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது.

கடைசி​யாக அந்த அணி ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 229 ரன்​கள் இலக்கு அமைக்கப்பட்டிருந்த அந்த ஆட்​டத்​தில் இஷான் கிஷன் 31 பந்​துகளில், 74 ரன்​களும் அபிஷேக் சர்மா 29 பந்​துகளில் 57 ரன்​களும் விளாசி அணி​யில் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்திருந்தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும்.

அபிஷேக் சர்மா நடப்பு சீசனில் இது​வரை ஒரு சதம், 3 அரை சதங்​கள் என 54.28 சராசரி மற்​றும் 212.29 ஸ்டிரைக் ரேட்​டுடன் 380 ரன்​களை குவித்​துள்​ளார். இவருக்கு அடுத்​த​படி​யாக ஹெய்ன்​ரிச் கிளாசன் 349 ரன்​களும், இஷான் கிஷன் 312 ரன்​களும் வேட்​டை​யாடி உள்​ளனர். தொடக்க வீர​ரான டிரா​விஸ் ஹெட்​டிடம் இருந்து மட்​டுமே பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை. அவர், இது​வரை 186 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார். இதனால்​ கணிசமான ரன்​களை சேர்ப்​ப​தில்​ அவர்​, கவனம் செலுத்தக்கூடும்.

வெற்​றிப் பாதைக்கு திரும்​புமா மும்பை இந்தியன்ஸ்? - இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in