சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடி தொடருமா? - டெல்லி கேப்​பிடல்​ஸுடன் இன்று மோதல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடி தொடருமா? - டெல்லி கேப்​பிடல்​ஸுடன் இன்று மோதல்
Updated on
2 min read

ஹைத​ரா​பாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​கள் மோதுகின்றன.

இஷான் கிஷன் தலை​மையி​லான ஹைத​ரா​பாத் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. கடைசி​யாக அந்த அணி, சிஎஸ்​கேவை 10 ரன்​கள் வித்தியாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. பாட் கம்​மின்ஸ் இல்​லாத நிலை​யிலும் கடந்த 2 ஆட்​டங்​களி​லும் பெரிதும் அறியப்​ப​டாத இளம் வீரர்​கள் குழு சிறப்​பாக செயல்பட்டிருந்​தது.

பிரஃபுல் ஹிங்​கே, ஷகிப் ஹுசைன், ஷிவாங்க் குமார் ஆகியோர் தங்​களுக்கு கிடைத்த வாய்ப்​பு​களை சரி​யாக பயன்​படுத்தி வெற்​றிக்​கான பங்​களிப்பை வழங்​கினர். இவர்​கள் பந்​து​வீச்சு தாக்​குதலில் வேகத்​தை​யும், அதே​நேரம் துல்​லிய​மான கட்​டுப்​பாட்​டை​யும் வெளிப்​படுத்தினர். ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு எதி​ராக பிரஃபுல் ஹிங்​கே​யின் அபார​மான பந்​து​வீச்சை தொடர்ந்ந்து, சென்னை சூப்​பர் கிங்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் ஈஷன் மலிங்கா தலை​மையி​லான பந்துவீச்சாளர்​கள் ஒருங்​கிணைந்து செயல்​பட்​டனர்.

அந்​தப் போட்​டி​யில், டெத் ஓவர்​களில் ஹைத​ரா​பாத் அணியின் பந்​து​வீச்​சாளர்​கள் மிகத் துல்​லிய​மாகப் பந்​து​வீசி​ய​தால் சொந்த மண்​ணில் அடுத்​தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்​திருந்​தது. பந்​து​வீச்​சில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்​சியே அந்த அணி​யின் தற்போதைய வெற்​றிப் பயணத்​துக்கு முக்​கிய​மான காரண​மாக அமைந்​துள்​ளது.

பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் ஹைத​ரா​பாத் அணியின் அணுகு​முறை ஆக்​ரோஷம் நிறைந்​த​தாகவே உள்​ளது, ஆனால் அதற்​கேற்ற பலன் சீராகக் கிடைக்கவில்லை. தொடக்க வீரர்​களான டிரா​விஸ் ஹெட், அபிஷேக் சர்​மா, 3-வது வீர​ராக களமிறங்​கும் தற்​காலிக கேப்​டன் இஷான் கிஷன் ஆகிய மூவரும் ஒருங்​கிணைந்த செயல் திறனை இன்​னும் வெளிப்​படுத்​த​வில்​லை.

தொடக்க ஆட்​டக்​காரர்​கள் இணைந்து ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்​துக் கொடுக்​காத பட்​சத்​தில் மிடில் ஆர்டர் வீரர்​கள் நெருக்​கடியை சந்​திப்​பது வழக்​க​மாகி வருகிறது. இதன் விளை​வாக, பெரும் சுமை ஹென்​ரிச் கிளாசன் மீதே விழுகிறது. விக்​கெட்​டு​கள் அடுத்​தடுத்து விழுந்த பிறகு களமிறங்க வேண்​டிய கட்​டா​யத்​துக்கு உள்ளாகும் கிளாசன், முதலில் அணியை மீட்டு எடுத்​து, அதன் பின்​னரே அதிரடியைத் தொடங்க வேண்​டிய சூழலுக்​குத் தள்​ளப்​படு​கிறார்.

கிளாசன் மிகக் குறுகிய காலத்​தில் அதிரடி​யாக ரன்களைக் குவிக்​கும் திறன் கொண்​ட​வர் என்​றாலும், ஆரம்​பத்​திலேயே தனது இயல்​பான ஆட்​டத்​தைக் கட்டுப்படுத்த வேண்​டிய கட்​டா​யத்​துக்கு அவர் தள்ளப்படுகிறார். இது அவரது பணியை கடினமாக்குகிறது. இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் டாப் 3 பேட்​ஸ்​மேன்​கள் சீரான திறனை வெளிப்​படுத்​து​வ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

கடந்த ஆட்​டத்​தில் 22 பந்​துகளில் 59 ரன்​கள் விளாசிய அபிஷேக் சர்​மா​விடம் இருந்து மீண்​டும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது.

கடைசி​யாக அந்த அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி-யை வீழ்த்​தி​யிருந்​தது. இந்த ஆட்​டத்​தில் கே.எல்​.​ராகுல், டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்​தி​யிருந்​தனர். அதேவேளை​யில் இறு​திக்​கட்ட ஓவர்​களில் டேவிட் மில்​லர் அதிரடி​யாக விளை​யாடி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

தொடக்க வீர​ரான பதும் நிஷங்கா​வும் சிறப்​பாக செயல்பட்டு வரு​கிறார். அதேவேளை​யில் முதல் 2 ஆட்டங்களில் அதிரடி​யாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்த சமீர் ரிஸ்​வி​யிடம் இருந்து அதன் பின்​னர் பெரிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. கடைசி 3 ஆட்​டங்​களி​லும் அவர், ஒற்றை இலக்க ரன்​னில் ஆட்​ட​மிழந்து இருந்​தார். அணி​யில் தனது இடத்தை தக்கவைக்க வேண்​டுமென்​றால் சமீர் ரிஸ்வி மீண்​டும் மட்டையை சுழற்ற வேண்​டும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் கடந்த சீசனில் அந்த அணி​யின் சிறந்த பந்​து​வீச்​சாள​ராகத் திகழ்ந்த மிட்​செல் ஸ்டார்க் தற்​போது இல்​லாத நிலை​யில், தென் ஆப்பிரிக்காவின் வேகப்​பந்து வீச்​சாள​ரான லுங்கி நிகிடி பந்​து​வீச்​சுப் பிரிவை மிகச்​சிறப்​பாக வழிநடத்தி வருகிறார். அவர் ரன்​களைக் கட்​டுப்​படுத்​து​வதோடு மட்டுமல்​லாமல், விக்​கெட்​டு​களை வீழ்த்​துவதும் பலமாக உள்​ளது. நடப்பு சீசனில் அவர், 7 விக்​கெட்​களை வீழ்த்தியுள்​ளார்.

கேப்​டன் அக்​சர் படேலும் சிக்​க​ன​மாகப் பந்​து​வீசி, நடுஓவர்களில் ரன் குவிப்பை கட்​டுப்​படுத்தி வரு​கிறார். இருப்​பினும், இடதுகை மணிக்​கட்டு சுழற்​பந்து வீச்சாளரான குல்​தீப் யாதவ் எதிர்​பார்த்த அளவுக்கு சிறப்பான செயல் திறனை வழங்​க​வில்​லை. அதே சமயம் வேகப்​பந்து வீச்​சாளர்​களான முகேஷ் குமார், நடராஜன் ஆகியோர் ஒரு சில போட்​டிகளில் சிறப்​பாக செயல்​பட்டு இருந்​தனர். இவர்​களுக்கு ஹைத​ரா​பாத்​ அணி​யின்​ பேட்டிங்​ வரிசை சவால் அளிக்கக்கூடும்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிரடி தொடருமா? - டெல்லி கேப்​பிடல்​ஸுடன் இன்று மோதல்
பேரவைத் தேர்தல் 2026: பெண்கள் நலனில் அக்கறை காட்டுகின்றனவா அரசியல் கட்சிகள்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in