இந்​தி​யன்​ வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: மேத்வதேவிடம் வீழ்ந்தார் அல்​க​ராஸ்

இந்​தி​யன்​ வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: மேத்வதேவிடம் வீழ்ந்தார் அல்​க​ராஸ்
Updated on
1 min read

கலி​போர்​னியா: இந்​தி​யன்​வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்​டி​யின் ஆடவர் ஒற்​றையர் அரை இறு​திச் சுற்​றில் உலகின் முதல் நிலை வீர​ரான கார்​லோஸ் அல்​க​ராஸ் ​(ஸ்பெ​யின்), ரஷ்ய வீரர் டேனியல் மேத்​வ​தே​விடம் வீழ்ந்தார். அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் இந்​தி​யன்​வெல்ஸ் ஓபன் டென்​னிஸ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் நேற்று நடை​பெற்ற போட்​டி​யில் அல்​க​ராஸும், மேத் வ​தே​வும் மோதினர். இதில் 6-3, 7-6(3) என்ற செட் கணக்​கில் மேத்​வ​தேவ் வெற்றி பெற்று இறு​திச் சுற்​றுக்கு முன்னேறினார். முதல்​நிலை வீர​ரான அல்​க​ராஸை, தனது சிறப்​பான விளை​யாட்​டால் அதிர்ச்​சித் தோல்​வி​யுறச் செய்தார் மேத்​வ​தேவ். இறு​திச் சுற்​றில் ஜன்​னிக் சின்​னரை, எதிர்த்து விளை​யாட​வுள்​ளார் மேத்​வ​தேவ்.

இந்​தி​யன்​ வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: மேத்வதேவிடம் வீழ்ந்தார் அல்​க​ராஸ்
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: 1,872 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in