

சாண்டியாகோ: மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய மகளிர் அணி நேற்று 9-வது முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் ஹினா பனோ (14-வது நிமிடம்), சுனேலிதா தாப்போ (24-வது நிமிடம்), இஷிகா (31-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய மகளிர் அணி தனது அடுத்த ஆட்டத்தில் உருகுவே அணியுடன் இன்று மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி 9-வது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடும்.