இந்​தியா ஓபன் பாட்​மிண்​டன்: 2-வது சுற்​றில் பிர​னாய், கிடாம்பி ஸ்ரீகாந்த்

பி.​வி.சிந்து முதல் சுற்​றுடன் வெளி​யேறி​னார்
பிர​னாய் | கோப்புப்படம்

பிர​னாய் | கோப்புப்படம்

Updated on
1 min read

புதுடெல்லி: இந்​தியா ஓபன் பாட்​மிண்​டன் தொடர் டெல்​லி​யில் உள்ள இந்​திரா காந்தி விளை​யாட்டு வளாகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் 32-வது வயதான இந்​திய வீர​ரான கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்​டைச் சேர்ந்த எம்​.தருணை எதிர்த்து விளை​யாடி​னார்.

இதில் ஸ்ரீகாந்த் 15-21, 21-6, 21-19 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்​றார். அதேவேளை​யில் அனுபவம் வாய்ந்த ஹெச்​.எஸ்​.பிர​னாய், கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்த ஹாங் காங்​கின் லீ சியூக் யியுயை 22-20, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இடது கை வீராங்​க​னை​யான இந்​தி​யா​வின் மாளவிகா பன்​சோத் 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்​கில் சீன தைபே​வின் பை யூ போ-வை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். உலக ஜூனியர் சாம்​பியன்​ஷிப்​பில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் தன்வி ஷர்மா போட்டித் தரவரிசை​யில் 2-வது இடத்​தில் உள்ள சீனா​வின் வாங் ஜி யியை எதிர்த்து விளை​யாடி​னார்.

முதல் செட்​டில் கடுமை​யாக போராடிய தன்வி சர்மா 20-22 என இழந்​தார். எனினும் இதில் இருந்து மீண்டு வந்து அடுத்த செட்டை 21-18 என கைப்​பற்​றி​னார். ஆனால் முடிவை தீர்​மானித்த கடைசி செட்டை தன்வி சர்மா 13-21 என பறி​கொடுத்​தார். முடி​வில் ஒரு மணி நேரம் 9 நிமிடங்​கள் நடை​பெற்ற போராட்​டத்​தில் தன்வி சர்மா 20-22, 21-18, 13-21 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்.

முன்​னாள் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் பி.​வி.சிந்து தனது முதல் சுற்​றில் 22-20, 12-21, 15-21 என்ற செட் கணக்​கில் வியட்​நாமின் துய் லின் நுயென்​னிடம் தோல்​வி அடைந்​து தொடரில்​ இருந்​து வெளியேறினார்.

<div class="paragraphs"><p>பிர​னாய் |&nbsp;கோப்புப்படம்</p></div>
நாட்டின் பணவீக்கம் 0.83% அதிகரிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in