“காயங்களே மனவலிமையை அதிகமாக சோதிக்கும்” - மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா

“காயங்களே மனவலிமையை அதிகமாக சோதிக்கும்” - மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா
Updated on
1 min read

கட்டாக்: தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக கட்​டாக்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற முதல் டி 20 ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் ஆல்​ர​வுண்​ட​ரான ஹர்​திக் பாண்​டியா 28 பந்​துகளில 59 ரன்​களை விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். மேலும் பந்​து​வீச்​சிலும் சிறப்​பாக செயல்​பட்டு 16 ரன்​களை விட்டுக்கொடுத்து ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​னார்.

இடது காலில் ஏற்​பட்ட தசை பிடிப்பு காரண​மாக கடந்த 2 மாதங்​களாக ஹர்​திக் பாண்​டி​யா, சர்​வ​தேச போட்​டிகளில் பங்கேற்காமல் இருந்​தார். தற்​போது காயத்​தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி​யுடன் அணிக்கு திரும்பி தனது அதிரடி​யால் பலம் சேர்த்துள்ளார்.

ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்​திக் பாண்​டியா பிசிசிஐ டி.​வி.க்கு அளித்​துள்ள பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: காயத்திலிருந்து மீண்டு அணிக்​குள் திரும்ப வரும்​போது வலு​வாக​வும், பெரி​தாக​வும் வரவேண்​டும் என நினைத்​திருந்​தேன்.

காயம் நமது மனவலிமையை அதி​க​மாக சோதிக்கும். சில நேரங்​களில் அது நமக்கு சந்​தேகங்​களை​யும் உரு​வாக்​கும். என்னை நேசிப்​பவர்​களுக்​கு​தான் இந்​தப் பாராட்​டு​கள் செல்ல வேண்​டும்.

நான் பலமாக இருந்​தேன். பல விஷ​யங்​களை நன்​றாகச் செய்​தேன். அதெல்​லாம் எனக்கு தன்​னம்​பிக்​கையை அளித்​தது. ஒரு வீர​ராக எனது திறமையை நம்​பினேன். உங்​களை நீங்​களே நம்​ப​வில்லை என்​றால், மற்​றவர்​கள் எப்​படி உங்​களை நம்​பு​வார்​கள். இந்த கருத்தில் எனக்கு எப்​போதும் நம்​பிக்கை உண்​டு. இவ்​வாறு அவர் கூறினார்​.

“காயங்களே மனவலிமையை அதிகமாக சோதிக்கும்” - மனம் திறக்கும் ஹர்திக் பாண்டியா
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: 8-வது முறை​யாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in