ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 72 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு பதக்கம்

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 72 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு பதக்கம்
Updated on: 
1 min read

தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், யஷஸ்வினி கோர்படே ஜோடி 3–2 (11-6, 8-11, 8-11, 11-9, 11-9) என்ற கணக்கில் தென் கொரியாவின் பார்க் கேங்கியான், லீ டேவுன் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

இதன் மூலம் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. கடைசியாக 1954-ல் நடைபெற்ற தொடரில் இந்தியாவின் யதின் வியாஸ், மீனா பராண்டே ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் தற்போது 72 ஆண்டுக்குப் பின்னர் கலப்பு இரட்டையர் பிரிவில் ஹர்மித், யஷஸ்வினி ஜோடி பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: 72 ஆண்டுக்குப் பின் இந்தியாவுக்கு பதக்கம்
ஆசிய பாரா விளையாட்டு போட்டி: துளசிமதி, நவீன் தங்கம் வென்று அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in