மே.இ.தீவுகள் அணியை சமாளிக்க இந்தியாவுக்கு நல்ல திட்டம் தேவை: சுனில் கவாஸ்கர்

மே.இ.தீவுகள் அணியை சமாளிக்க இந்தியாவுக்கு நல்ல திட்டம் தேவை: சுனில் கவாஸ்கர்
Updated on
2 min read

புதுடெல்லி: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் நேற்று முன்​தினம் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்திய அணி 72 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த வெற்​றியின் மூலம் இந்திய அணி அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை தக்​க​வைத்​துக் கொண்டது.

நாளை (மார்ச் 1-ம் தேதி) கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​திய அணி, இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​களை எதிர்​கொள்​கிறது. இது இரு அணி​களுக்​குமே சூப்​பர் 8 சுற்​றில் கடைசி ஆட்​டம் ஆகும்.

இந்த சுற்​றில் இரு அணி​களும் தலா 2 ஆட்​டங்​களில் விளையாடி ஒரு வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் தலா 2 புள்ளிகளை பெற்​றுள்​ளன. இதனால் கொல்​கத்தா போட்டியில் வெற்​றியை வசப்​படுத்​தும் அணியே அரை இறு​திக்கு தகுதி பெறும்.

இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் ஜாம்​ப​வா​னான சுனில் கவாஸ்​கர் கூறிய​தாவது: ஒரு பேட்​ஸ்​மே​னாக அபிஷேக் சர்மா எப்​படி விளை​யாடக் கூடிய​வர் என நமக்​குத் தெரியும். ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான போட்​டி​யில் 55 ரன்கள் விளாசி​யதன் மூலம், அவரது ஆட்​டத்​தின் மீது சந்​தேகப்​பட்​ட​வர்​களை அபிஷேக் சர்மா அமைதியாக்கியுள்ளார்.

ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ராக ரன்​கள் குவிக்க அபிஷேக் சர்மா சிறிது நேரம் எடுத்​துக் கொண்​டார். சுழற்​பந்து வீச்சை மதித்து விளை​யாடி​னார். தேவை​யின்றி எந்​தவொரு ரிஸ்க்கான ஷாட்​டு​களை​யும் முயற்​சிக்​காமல் அமைதியாக விளை​யாடி​னார். இந்​தப் போட்​டி​யில் அவர், தடுப்​பாட்​டத்​தை​யும் வெளிப்​படுத்​தி​னார்.

அதைப் பார்க்க ஆச்​சரிய​மாக இருந்​தது. ஏனெனில், அபிஷேக் சர்மா இது​போன்று விளை​யாடியதை நாம் வழக்​க​மாக பார்த்​தது இல்​லை. அபிஷேக் சர்மா நிறைய விஷ​யங்​களைக் கற்​றுக் கொண்டு வரு​கிறார் என நினைக்கிறேன்.

ஒவ்​வொரு கிரிக்​கெட் வீரருக்​கும் இது போன்று தொடர்ச்சியாக ரன்​கள் குவிக்க முடி​யாத சுழல் உருவாகும். ஆனால், அதிலிருந்து நாம் எவ்​வளவு கற்​றுக் கொள்​கிறோம் என்​பது மிக​வும் முக்​கி​யம். அபிஷேக் சர்மா நிறைய கற்​றுக் கொண்​டுள்​ள​தாக நான் உணர்​கிறேன். இனிவரும் போட்​டிகளில் அவர், தனது வழக்​க​மான அதிரடி ஆட்​டத்தை வெளிப்​படுத்​தக்​கூடும்.

தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இந்​திய அணி உடைந்​தது. டாப் ஆர்​டரில் வலதுகை, இடதுகை பேட்​ஸ்​மேன்​கள் கூட்​டணி தேவை என்​பதை அவர்​கள் உணர்ந்​தனர். முந்​தையஆட்​டத்​திலிருந்து கற்றுக்கொள்வது மிக​வும் முக்​கிய​மானது, அணி​யின் நலனுக்​காக, சஞ்சு சாம்​சன் பெரிய அளவி​லான ஷாட்டை விளை​யாடி அவுட் ஆனார்.

அது பரவா​யில்​லை. ஏனென்​றால் அவர், இந்​திய அணிக்கு அற்​புத​மான தொடக்​கத்தை அமைத்​துக் கொடுத்​தார். டி20 உலகக் கோப்பை போன்ற தொடரில் அது முக்​கி​யம். அற்​புத​மான தொடக்​கம் அமைந்​தால் மற்ற பேட்​ஸ்​மேன்​கள் பந்தை அடித்து நொறுக்க நல்ல தளத்தை வழங்​கும்.

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி முற்​றி​லும் மாறு​பட்ட சவால்​களை வழங்​கும். அவர்​களை சாதா​ரண​மாக எடுத்துக்​கொள்ள முடி​யாது. அவர்​களின் பேட்​ஸ்​மேன்​கள் சிறந்த ஃபார்​மில் உள்​ளனர்.

அவர்​களின் பந்து வீச்​சாளர்​கள் சிறப்​பாக செயல்படுகிறார்​கள். அவர்​கள் எதிரணி​யின் தவறுகளை பயன்​படுத்​திக் கொண்டு சரி​யான நேரத்​தில் தாக்​குதல் ஆட்​டம் தொடுப்​பார்​கள்.

மேற்​கு இந்​திய தீவு​கள் அணி​யின் பேட்​டிங் அச்​சுறுத்​தலை சமாளிக்க இந்​தி​யா​வுக்கு ஒரு நல்ல திட்​டம் தேவைப்​படும். அவர்​களின் பேட்​ஸ்​மேன்​கள் முதல் பந்​திலிருந்தே அடிக்கத் தொடங்​கு​வார்​கள். அவர்​கள், காத்​திருக்க மாட்டார்​கள். இவ்​வாறு சுனில்​ க​வாஸ்​கர்​ கூறினார்.

மே.இ.தீவுகள் அணியை சமாளிக்க இந்தியாவுக்கு நல்ல திட்டம் தேவை: சுனில் கவாஸ்கர்
முடிந்தது தர்மயுத்தம்... முட்டுச் சந்தில் ஓபிஎஸ்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in