ராய்ப்பூரில் இன்று 2-வது டி20 போட்டி: அதிரடி வேட்டையை தொடரும் முனைப்பில் இந்திய அணி

ராய்ப்பூரில் இன்று 2-வது டி20 போட்டி: அதிரடி வேட்டையை தொடரும் முனைப்பில் இந்திய அணி

Published on

ராய்ப்பூர்: இந்​தியா - நியூஸிலாந்து அணி​கள் இடையிலான 2-வது டி20 ஆட்​டம் ராய்ப்​பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி20 தொடரில் நாக்​பூரில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 48 ரன்​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்​றது. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 238 ரன்​கள் குவித்​திருந்​தது. அபிஷேக் சர்மா 35 பந்​துகளில், 84 ரன்​களும் ரிங்கு சிங் 20 பந்​துகளில் 44 ரன்களும் விளாசி​யிருந்​தனர்.

239 ரன்​கள் இலக்கை துரத்​திய நியூஸிலாந்து அணி​யால் 20 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 190 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. இந்த வெற்​றி​யால் இந்​திய அணி 5 ஆட்டங்​கள் கொண்ட தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்கிறது. இந்​நிலை​யில் 2-வது ஆட்​டம் ராய்ப்​பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடை​பெறுகிறது.

முதல் போட்​டி​யில் இந்​திய அணி பேட்​டிங்​கில் அபார​மாக செயல்​பட்டு இருந்​தது. அபிஷேக் சர்மா தொடக்க பேட்டிங்கிலும், ரிங்கு சிங் இறு​திக்​கட்ட ஓவர்​களி​லும் அதிரடி​யாக செயல்​பட்டு இருந்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். மேலும் டி 20 உலகக் கோப்பை நெருங்​கு​வ​தால் சஞ்சு சாம்​சன், இஷான் கிஷன் ஆகியோ​ரும் பெரிய அளவில் ரன் வேட்டை நிகழ்த்​து​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும். இவர்கள் இரு​வருமே முதல் போட்​டியை சிறந்த முறை​யில் தொடங்​கினர். ஆனால் எளி​தாக தங்​களது விக்​கெட்​களை பறி​கொடுத்​தனர்.

இதனால் 2-வது ஆட்​டத்​தில் இரு​வரும் கவன​முடன் செயல்பட முயற்​சிக்​கக்​கூடும். 8-வது வரிசை வரை பேட்​ஸ்​மேன்​கள் இருப்​ப​தால் டாப் ஆர்​டரில் இந்​திய அணி​யின் வீரர்​கள் எந்​த​வித அச்​ச​மும் இல்​லாமல் மட்​டையை சுழற்று​வது பலத்தை அதி​கரித்​துள்​ளது. கேப்​டன் சூர்யகுமார் யாதவ் 22 பந்​துகளில் 32 ரன்​கள் சேர்த்​தது அவரது நம்​பிக்​கையை அதி​கரிக்​கக்​கூடும்.

ஹர்​திக் பாண்​டி​யா, ஷிவம் துபே, அக்​சர் படேல் ஆகியோரும் சிறந்த பார்​மில் இருப்​ப​தால் இன்​றைய ஆட்டம் ரசிகர்​களுக்கு விருந்​தாக அமையக்​கூடும். பந்​து​வீச்​சில் தொடக்க ஓவர்​களில் ஹர்​திக் பாண்​டி​யா, அர்ஷ்தீப் சிங் விக்​கெட்​களை வீழ்த்​து​வது பலம் சேர்ப்பதாக உள்​ளது.

பவர்​பிளேவுக்கு பிறகு ஜஸ்​பிரீத் பும்​ரா​வும், நடு ஓவர்​களில் வருண் சக்​ர​வர்த்​தி​யும் நேர்த்​தி​யாக செயல்​பட்டு நம்பிக்கை அளிப்​பவர்​களாக திகழ்​கின்​றனர். ஷிவம் துபேவின் வேகம் குறைந்த பந்​து​வீச்​சும் கைகொடுத்து வரு​கிறது.

நாக்​பூர் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி​யின் பந்​து​வீச்சு துறை கடும் அழுத்​தத்தை சந்​தித்து இருந்​தது. அதி​லும் கடைசி ஓவரை வீசிய டேரில் மிட்​செல் 21 ரன்​களை தாரை வார்த்​திருந்​தார். இது ஆட்​டத்​தின் முடி​வில் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்தி இருந்​தது. மேலும் ஜேக்​கப் ஃடபியை தவிர மற்ற அனைத்து பந்​து​வீச்​சாளர்​களும் ஓவருக்கு சராசரி​யாக 10 ரன்​களுக்கு மேல் வாரி வழங்​கி​யிருந்​தனர்.

இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் அந்த அணி பந்​து​வீச்​சில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பேட்​டிங்​கில் கடந்த ஆட்​டத்​தில் 78 ரன்​கள் விளாசிய கிளென் பிலிப்​ஸ் மீண்​டும் ஒரு முறை இந்​திய பந்​து​வீச்​சாளர்​களுக்​கு அழுத்​தம்​ கொடுக்​க முயற்​சிக்​கக்​கூடும்.

ராய்ப்பூரில் இன்று 2-வது டி20 போட்டி: அதிரடி வேட்டையை தொடரும் முனைப்பில் இந்திய அணி
சரியும் மக்கள் தொகையால் திணறும் சீனா: அரசின் கொள்கையும் சேதாரங்களும் - ஓர் அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in